தமிழகத்தில் இன்று
நீலகிரி தேயிலை விலை ஆராய நான்கு பேர் கமிட்டி
கோவை:
நீலகிரி தேயிலை விலை குறித்து ஆராய நான்கு பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழ்நாடு தொழில்துறைச் செயலர், தேயிலை வாரிய முதன்மை செயலர், கூட்டுறவுத் தேயிலைதொழிற்சாலைகளின் நிர்வாக இயக்குநர் நீலகிரி மாவட்ட கலெக்டர் ஆகியோர் இடம் பெறுகின்றனர்.
இந்நிலையில் திங்கள்கிழமை மாவட்ட படுகர் இனமக்கள் சம்மேளன கூட்டம் நாக்குபெட்டா கிராமத்தில் நடந்தது.இந்த கூட்டத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த படுகர் இன பிரதிநிதிகள் தேயிலை விலை பிரச்சனையில் அரசுக்குஆதரவாக பேசிய போது சலசலப்பு ஏற்பட்டது.
மே 26 ம் தேதி கூடைப்பந்துப் போட்டி தொடக்கம்
கோவை:
கோவையில் வரும் மே 26 ம் தேதி நாச்சிமுத்து கவுண்டர் கோப்பைக்கான அகில இந்திய அளவிலானகூடைப்பந்து போட்டி தொடங்குகிறது. இறுதிப்போட்டி மே 30 ம் தேதி நடைபெறுகிறது. வெற்றி பெறும் அணிக்குரொக்கப் பரிசும், கோப்பையும் வழங்கப்படும்.
கோவைவேளாண்பல்கலைக்கழகத்தில் நாட்டுநலப்பணித்திட்ட முகாம்
கோவை:
கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான நாட்டு நலப் பணித்திட்ட முகாம் துவங்கியது.
விழாவில் மாநில இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பழனிசாமி முகாமை துவக்கி வைத்தார்.பல்கலைக் கழக துணைவேந்தர் கண்ணையன் கலந்து கொண்டார்.
மத்திய அரசு திட்ட ஒருங்கிணைப்பு ஆலோசகர் பால் மாநில நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் விக்டர்ஆகியோர் கலந்து கொண்டனர்.