For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
வாலிபர் எரித்துக் கொலை: திரிபுராவில் தீவிரவாதிகள் வெறிச்செயல்
அகர்தலா:
திரிபுராவில் உள்ள தீவிரவாதிகள் (என்எல்எஃப்டி) பழங்குடி இனத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவரைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள். இச்சம்பவத்தில்சிபிஐ(எம்) கட்சித் தலைவர் படுகாயமடைந்தார்.
புதன்கிழமை மாலை தெற்குத் திரிபுராவில் ஜூரிசாரா பகுதியில் இச்சம்பவம் நடந்தது.
தீவிரவாதிகள் ஜூரிசாரா பகுதி சிபிஐ(எம்) தலைவர் தீரேந்திர டெபார்மா என்பவரது வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தத் தொடங்கினார்கள்.பின்னர் அவர்கள் வீட்டை தீயிட்டுக் கொளுத்தினார்கள்.
இச்சம்பவத்தில் தீரேந்திராவின் குடும்ப உறுப்பினர் ஒருவர் இறந்தார். அக்கும்பல் பின்னர் தீரேந்திராவை நோக்கித் துப்பாக்கியால் சுட்டது. அவர்லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
யு.என்.ஐ.