For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

காப்புக் கட்டி..அலகு குத்தி..தீ மிதித்து...

சென்னை:

கம்ப்யூட்டர்கள், சாட்டிட்ைடுகள், அணுகுண்டுகள் என ஒரு பக்கம் உலகம் அதிவேகமாக போய்க்கொண்டிருந்தாலும், மறு பக்கம், ந-ம-து -கி-ரா-மப் பு-றங்-க-ளின் மிகப் ப--ழ-ய நம்-பிக்-கை-க-ளும் தொடர்ந்-து -காண்-டுதான் இ-ருக்-கின்-ற-ன.

திருவண்ணாமலை மாவட்டம், குவளை என்ற கிராமத்தைச் சேர்ந்த 25 வயதாகும் மு-ரு-கன் கையில் மஞ்சள் கயிறுகட்டியி-ருந்-தார். அந்தக் கயிறுக்குப் பெயர் "காப்பு. இதைக் கட்டிவிட்டால் 15 நாட்களுக்கு அவர், ஊரை விட்டுவெளியே எங்கும் போகக் கூடாது. அப்படி என்ன தான் இ-ருக்-கி-ற--ற-து இந்தச் சின்னக் கயிற்றில்...?

-கி-ர-ா-மத்-தில் நடக்கப் போகும் மாரியம்மன் கோவில் திருவிழாவில், முருகன் தேர் இழுக்கப் போகிறார். இதுசாதாரண ஒன்றுதான். ஆனால் தனது முதுகில் அலகு (இரும்பு கொக்கி) குத்தித் தேரை இழுக்கப் போகிறார் என்ப-துதான் விசேஷம். முதுகைத் துளைத்து அதில் கொக்கியைப் போட்டு, அதைத் தேரில் இணைத்து தேரை இழுக்கவேண்டும். இதை எல்லாரும் செய்து விட முடியாது. மாலை போட்டு, விரதம் இருந்து, பக்தியுடனும்,கட்டுப்பாட்டுடனும் இருந்து இந்தத் தேர் இழுக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும்.

கிணறு வெட்டிக் கொண்டிருந்தபோது, பெரிய கல் விழுந்து முருகனின் கால் சேதமுற்றது. அது விரைவில்குணமானால் அம்மனுக்கு முதுகில் கொக்கி போட்டு தேர் இழுப்பதாக முருகன் வேண்டிக் கொண்டார். இப்போதுஅதை நிறைவேற்றப் போகிறார்.

சித்திரை மாதத்தில் இந்த தேர் இழுக்கும் விழா நடைபெறும். இந்த விழாவின்போது கிராமத்தவர்கள் அனைவரும்ஜாதி வேறுபாடுகளை மறந்து விழாவில் கலந்துகொள்கிறார்கள். வழக்கமாக வெள்ளிக்கிழமை தேர் இழுத்தல்நடைபெறும். விழா தேதி குறிக்கப்பட்டவுடன், அதை, முரசு அறைந்து ஊர்ச் சேவகர் ஊருக்கு அறிவிப்பார். அதன்பிறகு கிராமமே களைகட்டத் துவங்கும்.

யார், யார் தேர் இழுக்கப் போகிறார்கள் என்ற பட்டியல் பிறகு தயாரிக்கப்படும். அடையாளம் காணப்பட்டபக்தர்களுக்கு காப்பு கட்டும் வைபம் துவங்கும். கையில் காப்புக் கட்டப்பட்ட பிறகு அவர்கள் 15 நாட்களுக்குகிராமத்தை விட்டு வெளியேறக் கூடாது.

குவளை கிராமத்தில் இந்த மாரியம்மன் கோவில் விழா மிகப் பிரபலமானது. ஒ-ரு வழி-யாய் விழா-வும் தொடங்-கிதேர் இ-ழுக்-கும் வைப-வ-மும் வந்-த-து.

ஏழு பேர் தங்களது முதுகில் அலகு குத்தி தேர் இழுத்தனர். பக்தியுடனும், பரவசத்துடனும் அவர்கள் தேர்இழுத்தபோது, முகத்தில் வலிக்குப் பதில் நிம்மதிதான் தெரிந்தது. மு-ரு-கன் கூறுகையில், எந்த வலியும் எனக்குத்தெரியவில்லை. அலகு குத்தியதால் ஏற்பட்ட புண் இரண்டே நாட்களில் ஆறி விடும். இதற்காகஆஸ்பத்திரிக்கெல்லாம் போக மாட்டேன். அடுத்த நாளே வயல் வேலைக்கும் போக ஆரம்பிப்பேன் என்றார்.

அலகு குத்தித் தேர் இழுக்கும் விழாவில் கலந்து கொள்பவர்கள் பெரும்பாலும் நடுத்தர குடும்பத்தினர்தான்.அனைவரும் 20 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள். ஆண்கள் அலகு குத்தி தேர் இழுக்க, பெண்கள் அனைவரும்பூமிதி அல்லது தீமிதி என்று கூறப்படும், நெருப்பில் இறங்கி நடப்பதில் பங்கேற்கிறார்கள்.

நீளமாக வெட்டப்பட்ட குழியில் கனன்று கொண்டிருக்கும் கங்குக் குவியலில், கைகளை உயர்த்திக்கும்பிட்டவாறும், அம்மா என்று மனமுறுகி உரத்தக் குரலில் கூறியவாறும், நெருப்புக் குவியலை அவர்கள் ஓடிக்கடக்கும்போது பார்ப்பவர்களுக்கும் பக்தி வரும்.

அலகு குத்துவது, தீமிதி ஆகியவற்றால் உடலில் வலியோ அல்லது துன்பமோ ஏற்படாமல் இருக்க வாய்ப்பில்லை.ஆனால் இதைச் செய்பவர்கள் அவ்வாறு உணர்வதில்லை என்கிறார்கள். இது எப்படி சாத்தியம்? போரூர்ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியின் டாக்டர் சுமந்த் ராமன் இதுபற்றி விளக்குகையில், குறிப்பிட்ட இடத்தில் நமதுஉடலில் துளை ஏற்படுத்துவதால் அதன் நரம்புகள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள முடியும். எனவே அலகுகுத்தும்போது இதே மாதிரியான முறையை அவர்கள் பின்பற்றியிருக்கலாம். இதனால் ரத்தம் வராமல் அலகுகுத்திக் கொள்ள முடியும்.

தீமிதியைப் பொறுத்தவரை, நேரடியாக அவர்கள் தீயில் நடக்கவில்லை. கங்குக் குவியலில், பக்தி உணர்வுடனும்,தங்களை மறந்த நிலையிலும், வேகமாக ஓடிக் கடக்கிறார்கள். எனவே தீயின் சூடு அவர்களுக்குத் தெரிவதில்லை.காலின் அனைத்துப் பகுதிகளிலும் நெருப்புப் படாததால், தீப்புண்ணும் ஏற்பட வாய்ப்பில்லை என்கிறார் சுமந்த்.

குழந்தை வேண்--டும், மகளுக்கு திருமணம் நடக்க வேண்டும், தீராத நோய்கள் தீர வேண்டும், ஊரில் மழை பெய்யவேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும் என இந்த -தீ மி-தித்-தல், அல-கு குத்-த-லுக்-கா-ன காரணப் பட்டியல் நீள்கி-ற-து.

அதிவேக வளர்ச்சி-க---ளா-டு இந்-த பாரம்-ப-ரி-யங்-க-ளும் தொடர்-வ-து தான் இந்-தி-யா--வை மண் ம-ணம் கொண்-டஇந்-தி--யா-வா-க-வே வைத்-தி-ரு---க்-கின்-ற--ன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X