For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
கோ-வை குண்-டு வெடிப்-பில் இறந்-த-வர்-கள் கு-டும்-பத்-துக்-கு நஷ்-ட-ஈ-டு
கோவை:
கோவை குண்டு வெடிப்பில் பலியானோர் குடும்பங்களுக்கு மாவட்ட கலெக்டர்சந்தானம் நிவாரண நிதி வழங்கினார்.
கோவையில் கடந்த 1997ம் ஆண்டு கலவரம் நடந்தது. பின்னர் 1998ம் ஆண்டு குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 60க்கும் மேற்பட்டோர் இறந்தனர். பல வர்த்தகநிறுவனங்கள் சூறையாடப்பட்டன.
இதில் பாதிப்படைந்தோர், மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு பெருமளவில் இழப்புஏற்பட்டது. இதற்கு அரசு -நஷ்ட ஈடு வழங்கி வருகிறது.
முதல்கட்டமாக ஏற்கனவே 2 கோடியே 76 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இன்று கோவை மாவட்ட கலெக்டர் சந்தானம் 104குடும்பங்களுக்கு ரூ. 2கோடியே 23 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.
இத-னை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர்.