For Daily Alerts
Just In
மே.வங்க கிரிக்கெட் அலுவலகம் முன் ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்
கல்கத்தா:
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்று கோரி கிரிக்கெட் ரசிகர்கள் சுமார் 50 பேர்,கல்கத்தா ஈடன் கார்டனில் உள்ள மேற்கு வங்க கிரிக்கெட் சங்க அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, கிரிக்கெட் சூதாட்டத்துக்கு முக்கிய காரணமாகக் கருதப்படும் சர்வதேச கடத்தல்காரர் தாவூத் இப்ராஹிமின் உருவபொம்மைஎரிக்கப்பட்டது.
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அசாருதீன், அஜய் ஜடேஜா, கபில் தேவ் ஆகியோரை இந்திய கிரிக்கெட்அணியிலிருந்து நீக்கவேண்டும் என்று கோரும் வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிடித்திருந்தனர். கிரிக்கெட்சூதாட்டத்துக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினர்.
யு.என்.ஐ.