For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: நாளை பங்களாதேஷுடன் இந்தியா மோதுகிறது

By Staff
Google Oneindia Tamil News

டாக்கா:

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், செவ்வாய்க்கிழமை நடைபெறும்ஆட்டத்தில் இந்தியாவும், பங்களாதேஷ் அணியும் மோதுகின்றன.

7-வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்றுவருகிறது. மேட்ச் பிக்ஸிங் தொடர்பான பலத்த குற்றச்சாட்டுகளுக்கு இடையே, இந்தியஅணி இப் போட்டியில் பங்கு கொள்கிறது.

இதுவரை நடந்த 6 ஆசியக் கோப்பைப் போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்று ஆசியக்கோப்பையை இந்தியா வென்றுள்ளது. இந்த முறையும் கோப்பையை வெல்லவேடாக்கா வந்துள்ளோம். கோப்பையை வெல்ல கூடுமான வரை கடுமையாகப்போராடுவோம் என்றார் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி.

இந்திய அணியில் ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத் ஆகியோர் இல்லாதது குறைதான்.இருப்பினும், டி. குமரன் மற்றும் அமித் பண்டாரி இருவரையும் வைத்து அந்தஇடத்தைப் பூர்த்தி செய்வோம். இப்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணிதான்சிறந்த அணி என்றார் அவர்.

இப்போதைய நிலவரப்படி எந்த அணியையும் எளிதாக எடுத்துக் கொள்ளமுடியாது.சொந்த நாட்டில் விளையாடுவது பங்களாதேஷ் அணிக்குக் கூடுதல் பலமாக இருக்கும்.ஆகவே, அந் நாட்டுன் செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஆட்டத்தை முக்கியமானஒன்றாகக் கருதியே இந்திய அணி விளையாடும். கடந்த உலகக் கோப்பைப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி பங்களதேஷ் சாதனை படைத்தது என்பதை யாரும்மறந்து விடமுடியாது என்றார் இந்திய அணியின் பயிற்சியாளர் கபில் தேவ்.

விக்கெட்டின் தன்மை, சீதோஷ்ண நிலை, எவ்வளவு ஓவர்கள் விளையாடவேண்டும்என்பதைப் பொருத்து இந்திய அணியின் ஆட்டம் இருக்கும். குறிப்பிட்ட நாளில்விளையாட முடியாதபட்சத்தில் வேறொரு நாளில் அந்த ஆட்டத்தை விளையாடும்படிஅதிகாரிகள் கூறினால், அதை ஏற்று விளையாடவேண்டியது ஒரு அணியின் கடமை.அதன்படிதான் இந்தியாவும் விளையாடும் என்றார் கபில் தேவ்.

இந்திய அணி சிறந்த பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. டெண்டுல்கர், திராவிட்,அசாருதீன், ஜடேஜா, ராபின் சிங் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் அணியில் உள்ளனர்.அனைவரும் சிறந்த வீரர்கள், அதிக அனுபவசாலிகள் என்றார் கங்குலி.

பங்களாதேஷைப் பொருத்தவரை பேட்டிங், பீல்டிங், பந்துவீச்சு என அனைத்துப்பிரிவிலும் இப் போட்டியில் கலந்து கொள்ளும் பிற அணிகளை விட குறைவானதிறனையே கொண்டுள்ளது. இருப்பினும், கிரிக்கெட்டில் எதுவும் நடக்கலாம் என்பதைகடந்த உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானை அந்த அணி தோற்கடித்ததுநிரூபித்தது.

எங்கள் அணியை விட இந்திய அணி சிறந்தது என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.இருப்பினும், இந்தியாவைத் தோற்கடிக்க கடுமையாகப் போராடுவோம். கடந்தஆண்டுகளில் நாங்கள் சிறப்பான பயிற்சி பெற்றுள்ளோம். சொந்த நாட்டில் வெற்றிபெறவேண்டும் என்பதே இப்போதையை எங்கள் இலக்கு. எங்கள் அணியின் பீல்டிங்திறமை மேம்பட்டுள்ளது என்றார் பங்களாதேஷ் அணியின் கேப்டன் அமினுல்இஸ்லாம்.

அணிகள் விவரம்:

இந்தியா:

சவுரவ் கங்குலி, ராகுல் திராவிட், சச்சின் டெண்டுல்கர், அசாருதீன், அஜய் ஜடேஜா,ராபின் சிங், ஹேமங் பதானி, சபா கரீம், அனில் கும்ளே, சுனில் ஜோஷி, நிகில் சோப்ரா,அஜிக் அகார்கர், டி. குமரன், அமித் பண்டாரி.

பங்களாதேஷ்:

அமினுல் இஸ்லாம், ஓமர் குலு, உசேன் பித்யுத், காலீத் மசூத் பிலோட், அக்ரம் கான்,நெய்மூர் ரஹ்மம், ஹபிபுல் பார் சுமன், முகம்மது ரபீக், இனாமுல் ஹக், ஹசிபுல் உசேன்சாந்தா, மோஞ்சுருல் இஸ்லாம், முஸ்தாபிக் ரஹ்மான் பாபு, சபியுதீன் அகமத், காலீத்மசூத் சுஜன்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X