தமிழகத்தில் இன்று
டெல்லி:
பிஜியில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து நேரடியாக ஆராய்வதற்காக வெளியுறவுத் துறைசெயலாளர் எஸ்.டி.தேவாரே பிஜி விரைந்தார்.
பிரதமர் மகேந்திர பால் செளத்ரியின் ஆட்சி நீக்கம் செய்யப்பட்டு, ராணுவம் ஆட்சியைப் பிடித்துள்ளதாகஅறிவித்துள்ள சூழ்நிலையில் இந்தியா தற்போதுதான் பிஜி விவகாரத்தில் வெளிப்படையாக தலையிடத்துவங்கியுள்ளது.
வெளியுறவுத் துறையில் பொருளாதார விவகாரப் பிரிவில் உள்ள தேவாரே, பிஜித் தலைநகர் சுவாவுக்குவிரைந்துள்ளார்.அங்கு என்ன நடக்கிறது என்பது குறித்து அவர் மத்திய அரசுக்குத் தகவல்கொடுப்பார். அதன் பின்னர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கும் அவர் செல்கிறார்.
பிஜி விவகாரம் குறித்த காமன்வெல்த் நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளுடன் இந்தியா தொடர்ந்துதொடர்பு கொண்டுள்ளது.செளத்ரி அரசு நீக்கப்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஏற்கனவேஇந்தியா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.