For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

கே: இன்றுள்ள இந்திய அரசியலைப் பற்றி, வருங்கால அல்லது அடுத்ததலைமுறையினர் என்ன நினைப்பார்கள்...?

ப: கவலை வேண்டாம். ஒன்றும தப்பாக நினைக்க மாட்டார்கள். சொல்லப் போனால்வருங்காலத் தலைமுறையினர் எதைப் பற்றியும் ஒன்றுமே நினைக்க மாட்டார்கள்.அந்த அளவுக்கு அவர்களை இப்போதே மழுங்க அடித்துக் கொண்டு வருகிறோம்.

கே: பெண் என்பவள் எப்படித்தான் இருக்க் வேண்டும்? அதையாவதுகூறுங்களேன்...?

ப: இருக்க வேண்டும் - என்று நீங்கள் தீர்மானித்து விட்ட பிறகு, உங்களோடு பேசிபிரயோஜனமில்லை.

கே: ரஷ்ய கம்யூனிஸம் எடுபடாமல் போய்விட்டது. ஆனால் சீனக் கம்யூனிஸம்வலுவுடன் உள்ளதே ...எப்படி?

ப: சீனாவில் சந்தைப் பொருளாதாரத்திற்கு கம்யூனிஸம் என்று பெயர் வைத்துவிட்டார்கள். அதுதான் ரகசியம். நமது நாட்டில் இருக்கும் அமைப்புக்கு ஜனநாயகம்என்று பெயர் வைத்துவிட்டு, உலகிலேயே பெரிய ஜனநாயகம் என்று நாம் சொல்லிக்கொள்ளவில்லையா? அந்த மாதிரிதான்.

கே: போர் நிலவரங்களை நேரில் ஆராய, தமிழக எம்.பி.க்களை இலங்கைக்குஅனுப்ப வேண்டும் - என்று பிரதமர் வாஜ்பாய்க்கு ஜெயலலிதா வேண்டுகோள்விடுத்துள்ளாரே...?

ப: நல்ல ஐடியா. ஆனால் கொழும்புவுக்கு அனுப்பி பிரயோஜனமில்லை. எல்லாஎம்.பி.க்களையும் ஒரே தூது கோஷ்டியாக யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி, இரண்டுதரப்புக்குமிடையே நிற்க வைக்க வேண்டும். ஒரு வேளை நமக்கெல்லாம் விமோசனம்கிடைத்தாலும் கிடைக்காலாம்.

(ஒரே ஒரு எம்.பி.யைத் தவிர).

கே: சட்டமன்றங்கள் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதுதொடர்பாக ஜனாதிபதிக்கும், கவர்னர்களுக்கும் காலக்கெடு நிர்ணயிக்கவேண்டும். சட்ட திருத்தம் தேவை என்று கருணாநிதி பேசியிருப்பது குறித்து...?

ப: சரியான கோரிக்கை. ஆனால் ஒன்று. பொதுமக்கள் சமர்ப்பிக்கும் மனுக்கள் மற்றும்புகார்கள் மீது மாநில அரசு முடிவெடுக்க ஒரு காலக் கெடுவை நிர்ணயித்துவிட்டு,அதற்குப் பிறகு இந்தக் கோரிக்கையை முதல்வர் முன் வைத்தால் அது ரொம்பவும்நியாயமாக இருக்கும்.

கே: பீஹார் எம்.பி.க்கள், இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் மிக அநாகரிமாகநடந்து இருக்கிறார்களே...? அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ப: அடுத்து ஒரு பேட்டை ரெளடி நிறைய பேரை அடித்துவிட்டானாமே? என்றுகேட்பீர்கள். இந்த மாதிரி விஷயத்திற்கெல்லாம் நீங்கள் ஆச்சரியப்-பட்டுக்கொண்டிருந்தால், நான் என்ன செய்வது?

கே: வியாபார நோக்கில் இலங்கைக்கு, இந்தியா ஆயுதம் விற்கலாம் என்றுஆர்.உமாநாத் யோசனை தெரிவித்துள்ளது பற்றி...?

ப: எதிர்காலத்தைப் பற்றி சற்றும் அக்கறை இல்லாமல் பேசி வரும்அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் ஒரு புறம்; செய்வது அறியாமல் தயங்கிதயங்கி காலத்தைக் கடத்திக் கொண்டே இருக்கும் மத்திய ஆட்சியாளர்கள் ஒரு புறம்;இவர்களுக்கிடையே தெளிவாகச் சிந்தித்து துணிவோடு பேசியிருப்பவர் உமாநாத்.அவரும், அவருடைய கட்சியும் பாராட்டுக்குரியவர்கள்.

கே; சென்னைக்கு வந்தது கிருஷ்ணா நீர்தான். இத்திட்டத்திற்கு ரூ 512 கோடிசெலவிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் துரைமுருகன் விளக்கமளித்துள்ளாரே?

ப: கடமையைச் செய். பலனைக் கருதாதே என்று கிருஷ்ணர் சொன்னார். செலவுசெய்வது உன் கடமை; தண்ணீர் வர வேண்டும் என்ற பலனைக் கருதாதே - என்கிறதுகிருஷ்ணா நீர் விவகாரம்.

கே: அரசியல் சட்டப் பிரிவு 356, 365 ஐ நீக்க வேண்டும் என்று கருணாநிதிமீண்டும் கூறியிருக்கிறாரே...?

ப: தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஒரு சிறு பாதகமும் வராத வகையில்தான் பேசித் தீரவேண்டும் - என்ற நிர்பந்தம் அரசியல்வாதிகளுக்கு உண்டு என்று யார் சொன்னது?

கே: மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் எப்படி இருக்கும்? அ.தி.மு.க.ஆட்சிக்கு வந்தால் எப்படி இருக்கும்?

ப: தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அ.தி.மு.க.வினர் மீதான வழக்குகள்தொடரும். அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தி.மு.க.வினர் மீதான வழக்குகள்ஆரம்பிக்கும்.

கே: ஒருவேளை த.மா.கா., காங்கிரஸூடன் சேர்ந்து, வரும் சட்டமன்ற தேர்தலில்தனித்துப் போட்டியிட்டால், வெற்றி வாய்ப்புகள் எப்படி இருக்கும்?

ப: தி.மு.க.வுக்குப் பிரகாசமாக இருக்கும்.

கே: நீர்வளத்தை முறையாக பயன்படுத்தத் தவறினால், இன்னும் 25 ஆண்டுகளில்இந்தியாவில் கடும் தண்னீர் பஞ்சம் ஏற்படும் என்று பிரதமர் வாஜ்பாய்எச்சரிக்கை விடுத்துள்ளது பற்றி?

ப: பிரதமருக்கு இருக்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. 25 ஆண்டுகள் வரை கடும்தண்ணீர் பஞ்சம் இருக்காது என்று நம்ப நான் தயாராக இல்லை.

கே: கட்சியின் அடிமட்டத் தொண்டனின் கருத்தை.தலைமை கேட்கும் நிலையைஉருவாக்கிய பெருமை ஜெயலலிதாவையே சேரும் என்று டி.டி.வி தினகரன்எம்.பி. கூறியுள்ளது பற்றி...?

ப: வீரமணியின் பேச்சைக் கேட்டு ஜெயலலிதா நடப்பதைப் பற்றி தினகரன்குறிப்பிட்டிருக்கிறார். உண்மைதான்.

கே: ஷரத் பவாரும், ஜெயலலிதாவும் இணைந்து ஒரு மூன்றாவது அணியைஉருவாக்க முயல வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு பிரிவுகூறியுள்ளதே?

ப:இந்த மூன்றாவது அணி என்பது பீடா, பீடிக்கடை மாதிரி ஆகிவிட்டது. யார்வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம்.

கே: வரும் காலத்தில் மத்திய ஆட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பங்கேற்கும்என்று ஹர்கிஷன் சிங் சுர்ஜித் கூறியுள்ளாரே?

ப: வரும் காலத்தில் நிறைய சோதனைகள் எழக்கூடும் என்பது இவர் சொல்லித்தான்தெரிய வேண்டுமா, என்ன?

இந்த கேள்வி-பதில் குறித்து உங்கள் கருத்தை அனுப்பவும்

(தொடர்ச்சி 2ம் பக்கம்...)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X