தமிழகத்தில் இன்று

Posted By:
Subscribe to Oneindia Tamil

ம-து-ரை அ-ரு-கே விபத்-தில் 3 சபரிமலை பக்தர்கள் சாவு

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மதுரை:

மாருதிவேன் மீது லாரி மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். அவர்களில் ஒரு சிறுவன், 2 சிறுமியர், மற்றும் வேன்டிரைவர். இவ்விபத்தில்மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.

இவ்விபத்து திங்கள்கிழமை காலை மதுரையிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கல்லுப்பட்டி அருகேயுள்ள சிவன்குளம் கன்மாய் பகுதியில் நடந்தது.

இதுகுறித்துப் போலீசார் கூறுகையில், சபரிமலைக்குச் சென்ற பக்தர்கள் அங்கிருந்து மாருதிவேனில் திரும்பும்போது அவர்கள் மேல் லாரி ஒன்றுமோதியதில் இவ்விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் வேன்டிரைவரும் பலியானார்.

இந்த வேன் மதுரை திரும்பிக்கொண்டிருந்த போது மதுரையிலிருந்து கேரளா சென்று கொண்டிருந்த லாரி மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டது என்றும்தெரிவித்தனர்.

இவ்விபத்தில் காயமடைந்த 5 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில்சேர்க்கப்பட்டுள்ளனர் என்றனர்.

யு.என்.ஐ.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற