For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

தடுமாற்றத்தில் தமிழ் மாநில காங்கிரஸ்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் வரவுள்ள நிலையில், யாருடன், கூட்டு சேருவது என்ற குழப்பத்திலும், தடுமாற்றத்திலும் தமிழ் மாநிலகாங்கிரஸ் உள்ளது.

தமிழக அரசியல் களம் , நாளுக்கு நாள் சூடுபிடித்துக்கொண்டிருக்கிறது. 1967 -ம் ஆண்டில் இருந்து இதுவரை தி.மு.க அல்லது அ.தி.மு.க இந்த இரண்டுகட்சிகள் தான் ஆட்சி அமைத்து வருகின்றன.

ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் இந்த இரு கட்சிகள் தவிர மூன்றாவது அணி ஒன்று அமைக்கப்படவேண்டும் என்று மற்ற கட்சிகளிடையே ஒரு முயற்சிஅவ்வப்பொழுது நடப்பதுண்டு. மற்ற கட்சித் தலைவர்களும் பரபரப்பாக செயல்படுவார்கள். இறுதியில் முயற்சிகள் கைவிடப்படும். உடனே அ.தி.மு.க.அல்லது தி.மு.க ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பார்கள்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, மூப்பனார் தலைமையில் மூன்றாவது அணி அமைக்கப்பட்டது. த.மா.கா வை பிரதானமாக வைத்துமூப்பனார் மூன்றாவது அணிக்கு தலைமை தாங்கினார். த.மா.கா-வுடன், புதிய தமிழகம், விடுதலைச்சிறுத்தைகள் ஜனதாதளம் உட்பட இன்னும் சிறியகட்சிகளும் சேர்ந்து கூட்டணி அமைத்தனர். ஆனால் படுதோல்வி அடைந்தது. இந்தக் கூட்டணிக்கு மொத்தம் 7 சதவீத வாக்குகளே கிடைத்தன.

த.மா.காவின் முகக்கிய பிரகர்களும் தோற்றனர் என்பது தான் தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சுவாரஸ்யம். ஆசியாவின் சிறந்த நிதியமைச்சர்என பெயர் பெற்ற முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் அமைச்சர்களான தனுஷ்கோடி ஆதித்தன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், புதியதமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி , விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் உட்பட அந்த கூட்டணியில் இருந்துபோட்டியிட்ட அத்தனை பேரும் படுதோல்வி அடைந்தனர்.

யாருமே எதிர்பாராத வகையில் அ.தி.மு.க. 17 இடங்களை பெற்றது, தமிழக அரசியல் வரலாற்றில் மறக்கமுடியாததாகவே சொல்லப்படுகிறது.தி.மு.க 22 இடங்களைப் பெற்றது. அ.தி.மு.க மறுபடியும் புத்துணர்ச்சி பெற்றது. இந்த பாராளுமன்றத்தேர்தல் முடிவுக்குப் பிறகு மூன்றாவது அணிஎன்பது விஷப்பரிட்சை என்று சோர்ந்து போனார்கள் மூன்றாவது அணித் தலைவர்கள்.

அதன் பிறகு, தி.மு.க அல்லது அ.தி.மு.கவுடன் கூட்டணிவைப்பது தான் எதிர்கால அரசியலுக்கு நல்லது என்று முடிவெடுத்த த.மா.கா தலைவர்மூப்பனார் , அ.தி மு.கவுக்கு ஆதரவு என்று தெரிவித்தார். சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று அ.தி.மு.க தரப்பில்த.மா.கா தலைவர்களிடம் சொல்லப்பட்டாலும். இப்போதைக்கு, த.மா.கா , அ.தி.மு.கவுக்கு ஆதரவு கொடுக்கட்டும். மற்றதெல்லாம் பிறகுபார்த்துக்கொள்ளலாம் என்றே நினைத்தனர் அ.தி.மு.கவில்.

தற்பொழுது அ.தி மு.க கூட்டணியில் இருக்கின்ற த.மா.கா வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இல்லாமல் போனாலும்,இத்தனை நாள் கூட்டணியாக இருந்துவிட்டு தேர்தல் நேரத்தில் எதிராக செயல்பட்டால் , மக்களிடம் தன்னிலை விளக்கம் கொடுக்கவேத.மா.காவுக்கு நேரம் சரியாக இருக்கும்.

இதுவும் தவிர தி மு.கவைவிட்டு விலகிய த.மா.கா மறுபடியும் தேர்தல் நேரத்தில் தி.மு.கவுடன் சென்றுவிட்டால் தி.மு.கவுக்கு வெற்றி வாய்ப்புஅதிகமாகிவிடும் . இதைத் தடுக்கவேண்டும் என்றால் இப்பொழுதே த.மா.காவுடன் கூட்டணி அமைத்துவிட்டால் நாளை அ.தி.மு.கவுடன் த.மா.காபிரிந்தாலும் அங்கேயும் தர்மசங்கடமான சூழ்நிலையே த.மா.காவுக்கு உருவாகும். ஆகையினால் தான் த.மா.கா உடனான கூட்டணிக்கு , அ.தி.மு.கஅவசரப்படுத்தியது. என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

இந்த நிலையில் , சமீபத்தில் தஞ்சாவூரில் நடந்த சசிகலா இல்ல திருமண விழாவில் , மூப்பனாரும் கலந்துகொண்டார்.அங்கே சசிகலாவை, விட்டுக்கொடுக்காமல் ஜெயலலிதா பேசியது மூப்பனாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது மட்டுமல்ல, ஆட்சியில் பங்கு என்பதெல்லாம் முடியாத காரியம்என்கிற ரீதியில் ஜெயலலிதா பேசியதும் மூப்பனாருக்கு அதிர்ச்சி.

தேர்தல் சமயத்தில், காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு த.மா.கா சொன்னால் மக்கள் அதைஎவ்வளவு தூரம் ஏற்றுக்கொள்வார்கள் என்பதும் தற்பொழுது த.மா.கா சீரியஸாக யோசித்துவரும் விஷயம் தான்.

இந்த நிலையில் மூப்பானார் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்தால், 90 சீட்கள் வரை எதிர்பார்க்கிறார். அ.தி.மு.க தரப்பில் இதைக் கண்டிப்பாகஒத்துக் கொள்ள மாட்டார்கள். 90 சீட் கேட்டால் தான் அறுபது சீட்டாவது கிடைக்கும் என்பது த.மா.காவின் எதிர்பார்ப்பு.

சுவாமியின் சிண்டு முடிதல்:

அ.தி.மு.க படு சைலண்டாக இருக்கிறது. இந்த நிலையில் , ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி, அ.தி.மு.க, தி.மு.க தமிழகத்தை ஆண்டது போதும்.மூன்றாவது அணி ஒன்று கண்டிப்பாக அமைத்தால் வெற்றி உறுதி. நீங்களே முதல்வராகலாம் என்று சுவாமியும் , மூப்பனாரிடம் பேசி வருகிறார்.

இந்த அணியும், அ.தி.மு.க, தி.மு.க நீங்கலாக தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும் இணைத்து கூட்டாட்சி முறைப்படி செயல்படுவோம் என்று சொன்னால்மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். என்பது தான் மூன்றாவது அணியின் அடிப்படை திட்டம் என்கிறார்கள் த.மா.காவில்.

தி.மு.க-வும் சரி, அ.தி.மு.கவும் சரி ஜனதாகட்சியை கூட்டணியில் சேர்த்துக் கொள்கின்ற எண்ணத்தில் இல்லை என்பதால், சுப்பிரமணிய சுவாமிமூப்பனாரிடம் இப்பொழுதே பேசிவருகிறார் என்றும் தமிழக அரசியல் களத்தில் பேச்சு அடிபடுகின்றது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X