For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

கணவர் மு-ரு-க--னுக்-கா-க வேப்ப மரம் சுற்றும் நளினி

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றுள்ள கணவன் முருகன்விடுதலைக்காக வேலூர் சிறைக்குள் வேப்ப மரத்தைச் சுற்றி வழிபட்டு வருகிறார்நளினி.

முருகன் - நளினி தம்பதிகளை பற்றி அறியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியாது.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதானவர்கள் இவர்கள்.

முருகன் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர். ராஜீவ் காந்தியை கொலை செய்யும்திட்டத்தோடு தமிழகம் வந்த விடுதலைப் புலிகள் கும்பலில் ஒருவர். அவனுக்குவீட்டில் அடைக்கலம் கொடுத்து உதவியவர் நர்ஸ் பத்மா. பத்மாவின் மகள் நளினி.மகன் பாக்கியநாதன். இவர்கள் இருவரும் முருகனின் சதித் திட்டத்திற்கு தேவையானஉதவிகளை செய்தனர்.

நாளடைவில் முருகனும், நளினியும் காதலர்களாக மாறினர். சிறப்பு புலனாய்வுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி விசேஷ சிறையில்அடைக்கப்பட்டிருந்தபோது, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அங்கேயேகுடும்பம் நடத்தி ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார் நளினி.

பின்னர் வழக்கு விசாரணை முடிந்து முருகன், நளினி உள்பட 28 குற்றவாளிகளுக்கும்விசேஷ நீதிமன்றம் தூக்குத் தண்டனை அளித்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்தாக்கல் செய்த அப்பீல் வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி ஆகியநால்வருக்கு மட்டும் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டது. மற்றவர்கள் விடுதலைசெய்யப்பட்டனர்.

ஆனால், பெண் என்பதாலும், ஒரு குழந்தையின் தாய் என்பதாலும் நளினியின்தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று பெண்கள்அமைப்புகள், அரசியல் கட்சிகள் குரல் கொடுத்தன. அதை ஏற்று தமிழக அரசும்பரிந்துரை செய்தது. அதன்படி நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாககுறைக்கப்பட்டுள்ளது.

தற்போது அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கணவர் முருகனுக்குவிதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று ஜனாதிபதிக்குகருணை மனுக்கள் அனுப்பியுள்ளார். அதோடு தாலி பாக்கியம் நிலைக்க தினம்கடவுளை வழிபட்டு வருகிறார்.

வேலூர் மத்திய சிறையில் உள்ள வேப்ப மரத்தை தினம் மூன்று முறை வலம் வந்துவணங்குகிறார். நாள் தவறாமல் இப்பிரார்த்தனையில் நளினி ஈடுபட்டு வருகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X