யோகம் பயிலுவோம்
சோனியாவை அழைக்க டெல்லி செல்கிறார் இளங்கோவன்
சென்னை:
பாண்டிச்சேரி, கோவை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இம்மாதம் 29ம் தேதிகாங்கிரஸ் தலைவர் சோனியா தமிழகம் வருகிறார். அவரது வருகையை உறுதிசெய்வதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் டெல்லி செல்கிறார்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் தலைமை மாற்றம் செய்த பிறகு எழுந்துள்ள கோஷ்டிப்பூசலை முடிவுக்கு கொண்டு வரவும், புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளஇளங்கோவனுக்கு தொண்டர்கள் மத்தியில் அங்கீகாரம் கிடைக்கவும் சோனியாவின்வருகை வழி வகுக்கும் என்று காங்கிரஸ் வட்டாரம் கருதுகிறது.
கடந்த மாதம் 5ம் தேதி தமிழக காங்கிரஸ் தலைமை மாற்றம் நடந்தது. பழைய தலைவர்திண்டிவனம் ராமமூர்த்தி அதிரடியாக மாற்றப்பட்டு, புதிய தலைவராக இளங்கோவன்நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்பதற்காக டெல்லியை விட்டு புறப்பட்டுவருவதற்குள், தமிழக காங்கிரஸ் நிலவரம் பெரிய போர் களமாக மாறியது.
பதவி பறிபோன கோபத்தில், வேக வேகமாக கட்சி அலுவலகத்தை காலி செய்து,உரிமையாளரிடம் சாவியை கொடுத்து விட்டு போய் விட்டார் திண்டிவனம்ராமமூர்த்தி.
ஓராண்டுக்கு முன்னர் இவர் இப்பதவிக்கு வந்த பிறகு தான் இந்த அலுவலகத்தைஏற்பாடு செய்தார். சென்னை மயிலாப்பூர் லஸ் பகுதியில் கிருஷ்ணசாமிஅவென்யூவில் "குமுதம் பத்திரிகைக்கு சொந்தமான கட்டடம் இது. 5 லட்ச ரூபாய்அட்வான்ஸ், 60 ஆயிரம் ரூபாய் மாத வாடகை என்று பேசி அலுவலகதை பிடித்தார்.
தமிழக காங்கிரஸ் கட்சி செலவுகளுக்கென அகில இந்திய தலைமை பணம் தருவதைநிறுத்தி பல ஆண்டுகள் ஆகி விட்டன. வாழப்பாடி ராமமூர்த்தி தலைவராக இருந்தகாலத்தில் டெல்லித் தலைமை பயணம் தந்ததோடு சரி. அதன் பின்னர் கட்சித் தலைமைஏற்பவர்கள் தங்களது வசூல் திறமையால் தான் கட்சிச் செலவுகளை கவனித்துவந்தனர்.
தற்போதும் அதே நிலைமை நீடிக்கிறது. அதனால் இளங்கோவனும் தனக்கென தனிஅலுவலகத்தை ஏற்பாடு செய்து கொண்டுள்ளார்.
தேனாம்பேட்டையில் உள்ள நடிகை மனோரமாவுக்கு சொந்தமான பிரிவியூ தியேட்டர்தான் இப்போது தமிழக காங்கிரஸ் அலுவலமாக மாறியிருக்கிறது.
இந்த அலுவலகத் திறப்பு விழாவுக்கும் சரி, அதைத் தொடர்ந்து புதிய தலைவரானஇளங்கோவனுக்கு சென்னையில் 5ம் தேதி நடைபெற்ற பாராட்டு விழாவுக்கும் சரி,மற்ற கோஷ்டித் தலைவர்கள் யாரும் வரவில்லை. தங்கபாலு, குமரிஅனந்தன்,திண்டிவனம் ராமமூர்த்தி போன்ற முன்னாள் தலைவர்கள் பலரும் இந்நிகழ்ச்சிகளைபுறக்கணித்ததுடன், அவர்களது ஆதரவாளர்களையும் அதில் கலந்து கொள்ளாமல்செய்து விட்டனர்.
பிரபு, அன்பரசு போன்றவர்களும் அவர்களது ஆதரவாளர்கள் மட்டுமேஇந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில்இளங்கோவனால் திறம்பட செயல்பட முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்குவிடை சொல்வதற்காக சோனியாவின் தயவை அவர் நாடியுள்ளார்.
சோனியாவை தமிழகம் அழைத்து வந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைப்பதன் மூலம்சோனியாவிடம் தனக்குள்ள செல்வாக்கை எடுத்துக் காட்ட முடியும் என்று அவர்நம்புகிறார்.
மேலும் அவரது தமிழக வருகையின்போது எல்லா கோஷ்டித் தலைவர்களும் அவரைவரவேற்க வருவார்கள். அப்போது அவர்களை அழைத்து சோனியா பேசினால்போதும், மற்ற கோஷ்டிகளின் ஒத்துழைப்பு கிடைத்து விடும் என்றும் இளங்கோவன்நினைக்கிறார். அதற்கான திட்டமிடலோடு அவர் டெல்லி விரைகிறார்.
காமராஜர் பிறந்த நாளையொட்டி இம்மாதம் 29ம் தேதி தமிழகம் வர சோனியாதற்காலிகமாக திட்டமிட்டுள்ளார். அன்றைய தினம் பாண்டிச்சேரியில் நடைபெறும்காமராஜர் பிறந்த நாள் விழா பேரணியில் கலந்து கொள்கிறார். புதுவையில் காங்கிரஸ்ஆட்சி ஏற்பட்ட பிறகு நடைபெறும் நிகழ்ச்சி என்பதால், அதன் முக்கியத்துவத்தைஉணர்ந்து சோனியா வருகிறார்.
அதே நாளில் அவரை தமிழகத்திற்கும் அழைத்து வந்து தனது தலைமைக்கு வலுசேர்த்துக் கொள்ள இளங்கோவன் திட்டமிட்டுள்ளார். அதன்படி 29-ம் தேதி மாலைகோவையில் காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் ஒன்றை நடத்தவும், அதில்சோனியாவை பேச வைக்கவும் அவர் முயற்சிகள் மேற்கொண்டுள்ளார்.