For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜடேஜா வங்கி லாக்கரை குடைந்தெடுத்த வருமானவரித்துறை

By Staff
Google Oneindia Tamil News

கே: கேட்டவுடன் 24 மணி நேரத்தில் மின் இணைப்பு வழங்கப்படும் என்று ஆர்க்காடு வீராசாமிகூறியுள்ளது குறித்து...?

ப: மன்னிக்கவும். வழங்கப்பட இருப்பது மின்சார இணைப்புதானே தவிர - மின்சாரம் அல்ல. அது வரும், போகும். வந்தால் வரும், போனால்போகும்... சொல்ல முடியாது.

கே; பந்த் நடத்தியதற்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்வதாக - தேர்தல் கமிஷன் கூறுவது சட்டப்படி சரியா?

ப: தேர்தல் கமிஷனை இவ் விஷயத்தில் முடுக்கியுள்ளது நீதிமன்றம். அதனால் இதற்குத் தீர்வை நீதிமன்றத்தில்தான் தேட வேண்டும்.தேர்தல் கமிஷனைமுறைப்பதில் அர்த்தமில்லை.

கே: இந்திய அரசியல் கட்சிகளை எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்?

ப: இரண்டு வகைகள். ஊழல் செய்கிற கட்சிகள்; ஊழல் செய்ய வாய்ப்பில்லாத கட்சிகள்.

கே: சில கட்சித் தலைவர்களின் பெயர்களின் இறுதியில் "ஆர்" விகுதி சேர்த்து அவர்களது அபிமானிகள் அழைப்பது போல், எங்கள் அபிமானத்துக்குரியஉங்களை சோ ராமசாமியார் என்று அழைப்பதில் உங்களுக்கு ஆட்சேபணை இல்லையே?

ப: மரியாதை தருகிறோம் என்று சொல்லிக் கொண்டு சோர் என்று அழைக்காத வரையில், திருப்தி.

கே: மனிதனுக்கும்,மிருகத்துக்கும் ஆறாவது அறிவைத் தவிர வேறு அடிப்படை வித்தியாசம் என்ன?

ப: மிருகம் பசித்தால்தான் இரை தேடும். மனிதன் இந்த மாதிரி வரைமுறைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன்.

கே: இலங்கை அரசின் ஏஜெண்டாக ஜெயலலிதா செயல்படுகிறார் என்ற நெடுமாறனின் விமர்சனம் பற்றி...?

ப: இலங்கை அரசின் ஏஜென்டாக செயல்பட்ட பெருமை விடுதலைப் புலிகளுடையது. அதனால் அந்த இடத்துக்கு ஜெயலலிதா போட்டியிட முடியாது,. இலங்கைஅரசின் ஏஜெண்டின், ஏஜெண்டுகளாக இங்கே உழைப்பவர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கே: 2006-ல் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்போம்; 2001-ல் இரண்டாவது இடத்தைப் பிடிப்போம் என்று டாக்டர் ராமதாஸ் கூறி வருவது பற்றி...?

ப: 2001-லும், 2006-லும் பா.ம.க. ஜெயிக்கப் போகிறதோ இல்லையோ, 2000-த்தில் அக் கட்சிக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது.

கே: அடுத்த முதல்வர் ஆணா? பெண்ணா?

ப: எந்த முதல்வர் வந்தாலும், சில சமயங்களில் ஆணாகவும், சில சமயங்களில் பெண்ணாகவும்தான் செயல்படப் போகிறார். ஆகையால் அடுத்த முதல்வர்மட்டுமல்ல, எந்த முதல்வருமே - அர்த்தநாரீஸ்வரர்தான்.

கே: மின்சாரத் துறையை தனியார்மயமாக்கும் திட்டத்தை ஆதரிக்கிறீர்களா?

ப: ஆதரிக்கிறேன். இப்போது உள்ள பொறுப்பின்மை அகல, இது வழி செய்யும் என்று நம்புகிறேன்.

கே: இந்தியாவுக்கு ஜனநாயகம் தேவையில்லை என்று எப்போதாவது நினைப்பதுண்டா?

ப: அவ்வப்போது.

கே:மாநிலங்களுக்கு இப்போது நடைமுறையில் உள்ள அதிகாரம் போதுமானது என்று நினைக்கிறீர்களா?

ப: நிதி விஷயத்தில் மட்டும் கூடுதல் உரிமைகள் அளிக்கப்பட்டு, மற்றபடி இப்போதுள்ள ஏற்பாடே போதுமானது என்று நினைக்கிறேன்.

கே: ஒரு பத்திரிக்கை ஆரம்பிக்க தகுதி எதுவும் வேண்டாம்தானே? ( நான் உங்களை மனதில் வைத்துக்கொண்டு இதைக் கேட்கவில்லை)

ப: நானும் என்னை மனதில் வைத்துக் கொண்டு இந்த பதிலைச் சொல்லவில்லை. - ஒரு தகுதியும் வேண்டாம். தைரியமாக இறங்குங்கள்

கே: பாலங்கள் நகராக சென்னை நகரை மாற்றி அமைத்து விட்டார் என்று ஸ்டாலினை நாஞ்சில் மனோகரன் பாராட்டியுள்ளது பற்றி...?

ப: கிண்டல் செய்திருக்கிறார். எல்லாம் பாலமாகிவிட்டது, தெருக்களே காணோம்! என்று சொல்லியிருக்கிறார். பாராட்டா இது.

கே: இலங்கை கோரினால் ஆயுத உதவி பற்றி பரீசிலிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நட்வர் சிங் கூறியுள்ளாரே...?

ப: இலங்கைப் பிரச்சனையில், காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிற தெளிவு, பா.ஜ.க.வுக்கு நிச்சயமாக இல்லை.

கே: அதிக காலம் ஓய்வெடுத்து விட்டோம். இனி சுறுசுறுப்பாக செயல்படுவோம் என்று கட்சித் தொண்டர்களுக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர்இளங்கோவன் வேண்டுகோள் விடுத்துள்ளாரே?

ப: தூக்க கலக்கத்தில் கொஞ்சம் விழித்துக் கொண்டு மீண்டும் தூங்குவதற்கு முன், காங்கிரஸ் பேசுகிற பேச்சு இது. ஒரு மாதிரியாகத்தான் இருக்கும்.

கே: இப்பொழுது நாட்டில் நடக்கும் அக்கிரமங்களை பார்த்தால், இன்னொரு சுதந்திரப் போராட்டம் நடத்தவேண்டும் போல் எனக்குத் தோன்றுகிறது.உங்களுக்கு...?

ப: எனக்கு அப்படித் தோன்றவில்லை. முதல் சுதந்திரப் போராட்டத்தினால் விளைந்துள்ள பயனைப் பார்க்கும்போது, சுதந்திரப் போராட்டத்தில்நம்பிக்கை வரமாட்டேன் என்கிறது.

கே: வரும் தேர்தலில் தி.மு.க.வுடன் த.மா.கா. கூட்டணி வைத்துக் கொள்வதற்கான வாய்ப்பு உள்ளதா?

ப: இதற்கு வாய்ப்பே கிடையாது என்று அடித்துச் சொல்லும் நிலையில் நமது அரசியல் இல்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X