For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜடேஜா வங்கி லாக்கரை குடைந்தெடுத்த வருமானவரித்துறை

By Staff
Google Oneindia Tamil News

கே: ஆசையை அடக்க வழி ஏதாவது இருக்கிறதா...?

ப: இருக்கிறது. அந்த ஆசையை நிறைவேற்றிக் கொண்டு விட வேண்டும். அப்போது அந்த ஆசை மறையும்.

கே: இலங்கை அரசின் புதிய அரசியல் சட்டத்தை. அனைத்து தமிழர் அமைப்புகள் எதிர்த்துள்ளது பற்றி...?

ப: தவறு செய்திருக்கிறார்கள். இப்போதைய ஏற்பாட்டை ஏற்று, அதற்கு மேல் உரிமைகளை பெற பின்னர் முயற்சித்திருக்க வேண்டும். விடுதலைப்புலிகளுக்கு பயந்து, இப்போதே நிராகரிப்பு பாதையில் சென்றிருக்கின்றன இந்த அமைப்புகள். தவறான அணுகுமுறை.

கே: நீங்கள் எதற்கு எதிரி?

ப: எனக்கு.

கே: யாரிடம் உண்மையைச் சொல்லக்கூடாது? யாரிடம் பொய் சொல்லக்கூடாது?

ப: ஜோஸியரிடம் உண்மையை சொல்லி விடக் கூடாது. சொன்னால், அதை வைத்துக் கொண்டே அவர் பலன்களைச் சொல்வார். நாம் ஏமாந்துபோவோம், ஜோஸியரிடம் பொய் சொல்லக்கூடாது. சொன்னால் அதை வைத்து அவர் பலன்களைச் சொல்வார். ரொம்பவும் பிதற்றலாகப்போய்விடும்.

கே: மரக் கன்றுகள் வாங்கிய வகையில் பல கோடி ரூபாய் மோசடி என்று அரசு மீது ஜெயலலிதா கூறியுள்ள புகார் பற்றி...?

ப: அரசு தரப்பில் கூறப்பட்டுள்ள விளக்கத்தின் பலவீனத்தைப் பார்க்கும்போது, ஜெயலலிதாவின் குற்றச்சாட்டில் உண்மை இருக்கக்கூடும் என்றேதோன்றுகிறது.

கே: மு.க.ஸ்டாலின் : இரா.அன்புமணி - வித்தியாசம் என்ன?

ப: பயிற்சி அளிக்கப்பட்டு, பின்னர் பதவி அளிக்கப்பட்டவர் ஸ்டாலின். பதவி அளிக்கப்பட்டு பின்னர் பயிற்சி பெறட்டும் என வளர்க்கப்படுகிறவர் அன்புமணி.

கே: தமிழகம் - ஜாதிக் கட்சிகளின் மையமாகி வருவது பற்றி...?

ப: பெரியார் வாழ்ந்த மாநிலம்...பெரியார் வழி செல்கிற மாநிலம்...என்றெல்லாம் சொல்லிச் சொல்லியே, இந்த நிலை வந்திருக்கிறது. பெரியார்பிராமண ஜாதியினரை எதிர்த்தார்.

அந்த ஜாதி அடிப்படை இயக்கத்தினால் தோற்றுவிக்கப்பட்டவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். பிராமண ஜாதி எதிர்ப்பு தொடர்ந்தது. பின்னர் பிராமணஎதிர்ப்பு அர்த்தமற்றுப் போன நிலையில், ஒவ்வொரு ஜாதியினரும் வேறொரு ஜாதியினரை எதிர்க்க ஆரம்பித்தார்கள். ஜாதி இயக்கங்களும், ஜாதிமோதல்களும் வளர்ந்தன. விதை பெரியார் ஊன்றியது.

கே: இந்த உலகம் முழுவதும் பெண்களே ஆட்சி செய்யும் அதிகாரம் பெற்றால்...உங்கள் அபிப்ராயம் மாறுமா?

ப: மாறாது. உங்கள் அபிப்ராயம் மாறும். அனுபவம் உங்களைத் திருத்தும்.

கே:ஒரு நாட்டில் ஏற்படும் இயற்கையின் சீற்றத்துக்காக அந்த நாட்டின் அரசு மீது பழி போடலாமா...?

ப: இயற்கையின் கருணையினால் ஏற்படும் நன்மைகளை, ஒரு நாட்டின் அரசு தனது சாதனையாகக் காட்டிக் கொள்ளவில்லையென்றால் - இயற்கையின்சீற்றத்துக்கு அந்த அரசின் மீது பழி போடுவது சரியல்ல.

கே: கிறிஸ்தவர்கள் மீது நடந்த தாக்குதல்களுக்கு ஹிந்து இயக்கங்கள் மீது பழி சுமத்திய மூப்பனாரும், கிறிஸ்தவ பாதிரியார்களும் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று ராம. கோபாலன் வற்புறுத்தியுள்ளாரே...?

ப: ஆந்திர, கர்நாடக மாநில நிகழ்ச்சிகளைப் பொறுத்தவரையில், ராம. கோபாலனின் கோரிக்கை, முழுமையான நியாயம் உடையது.

கே: விடுதப்ை புலிகளுக்கு ஆதரவளித்து வரும் பா.ம.க.வை தடை செய்யக் கோரிய தமிழக காங்கிரஸ், பா.ம.க,வுடன் கூட்டணி வைத்துக் கொள்ளத்தயங்காது என்று காங்கிரஸ் மேலிடத் தலைவர் கூறியுள்ளாரே?

ப: இதில் பெரிய முரண்பாடு இல்லையே! தடை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கூட்டணியில் சேர்ந்து சைஃபராக்கி விட வேண்டும். இரண்டுக்குமேஇலக்கு ஒன்றுதானே!

கே: தீவிரவாதத்தை ஒழிக்க புதிய சட்டம் கொண்டு வருவது தேவையற்றது என்று ராம் ஜேத்மலானி கூறியுள்ளாரே! இது பற்றி...?

ப: பூனையை மடியில் கட்டிக்கொண்டு சகுனம் பார்க்க முற்பட்டது பா.ஜ.க.வின் குற்றம்.

கே: பிகாரில் நடந்த விமான விபத்து பற்றி...?

ப: பழைய விமானம் என்பதால்தான் இந்த விபத்து நேர்ந்தது - என்ற கருத்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் விபத்தின் காரணம் என்ன என்பதுஇன்னமும் அறியப்படவில்லை. இது ஒருபுறமிருக்க, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு துக்ளக் தனது அனுதாபத்தைத் தெரிவிக்கிறது.

கே: கிரிக்கெட் வீரர்களின் வீடுகளில் நடந்த சோதனை பற்றி...?

ப: வெளியான செய்திகளை வைத்துப் பார்க்கும்போது, இந்த சோதனைகளில் சிக்கியிருப்பது - வருமான மறைப்பு மற்றும் வருமான வரி ஏய்ப்புஆகியவற்றுக்கான ஆதாரங்களே என்றுதான் தோன்றுகிறது. இது கிரிக்கெட் சூதாட்டக் குற்றத்தை நிரூபிக்கக்கூடிய சாட்சியம் அல்ல. அதற்கானஆதாரங்கள். கிடைக்கின்றனவா என்பது இனிமேல்தான் தெரிய வேண்டும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X