வீரப்பன் வீடியோ பார்த்துவிட்டு கருணாநிதி-கிருஷ்ணா தீவிர ஆலோசனை
சென்னை:
சென்னையில் முதல்வர் கருணாநிதியும், கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவும் வீரப்பன்அனுப்பிய வீடியோ கேஸட்டை பார்த்துவிட்டு அதில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகள்குறித்து விவாதித்துக் கொண்டுள்ளனர்.
தனது கோரிக்கைகளுக்கு அரசு அனுப்பிய பதில்களில் சில சந்தேகங்கள்இருப்பதாகவும் அது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்றும் சந்தன வீரப்பன்கூறியுள்ளது குறித்து கருணாநிதியுடன் விவாதிக்க கிருஷ்ண வெள்ளிக்கிழமை மாலைசென்னை வந்தார்.
தலைமைச் செயலகத்தில் அவரை கருணாநிதியை சந்தித்தார். நக்கீரன் கோபால் மூலம்வீரப்பன் சொல்லி அனுப்பிய விவரங்களை கருணாநிதி அவரிடம் விளக்கினார்.பின்னர் கோபாலிடம் வீரப்பன் கொடுத்தனுப்பிய கேஸட்டை இருவரும் பார்த்தனர்.
தெடார்ந்து இருவரும் ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளனர். ஆலோசனை முடிந்தபின்பு அரசு தரப்பு முடிவுகள் அறிவிக்கப்படும்.
சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்பதற்காகஅரசு தூதராக நக்கீரன் கோபால் காட்டுக்குச் சென்றார்.
இந்நிலையில் மூவேந்தர் முன்னேற்றக் கட்சித் தலைவர் சேதுராமன் ராஜ்குமார் கடத்தல்தொடர்பாக அனைத்துக் கட்சிக கூட்டத்தைக் கூட்ட வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளார்.
ராஜ்குமார் விடுவிக்கப்படாத வரை கர்நாடகத்தில் உள்ள 40 லட்சம் தமிழர்களுக்குபாதுகாப்பு இல்லை. இது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டவேண்டும் என சேதுராமன் கூறியுள்ளார்.