For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவை தலை நிமிரச் செய்யும் இரும்பு மனிதர் மிட்டல்

By Staff
Google Oneindia Tamil News

நியூயார்க்:

21ம் நூற்றாண்டின் உலகிலேயே மிகப் பெரிய இரும்பு உற்பத்தியாளராக இந்தியாவைச் சேர்ந்த லட்சுமி என்.மிட்டல் இருப்பார் என பிசினஸ் வீக் வாரஇதழ் கூறியுள்ளது.

லண்டனல் வசித்து வரும் மிட்டலுக்கு அமெரிக்கா உள்பட 8 நாடுகளில் நூற்றுக்கணக்கான இரும்பு உருக்குஆலைகள் உள்ளன. இப்போது இரும்பு உற்பத்தியில் உலக அளவில் 6வது இடத்தில் உள்ளார் மிட்டல்.

100 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் மிகப் பெரிய தொழில்துறையை நிர்மாணித்த ஜே.பி. மார்கனுக்குஇணையாக மிட்டலின் தொழில் வளர்ச்சியடைந்து வருவதாக பிசினஸ் வீக் கூறியுள்ளது. இப்போது ஜே.பி மார்கன்நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டால் மிட்டல். உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் குறித்த போர்ப்ஸ்பத்திரிக்கையின் பட்டியலில் மிட்டல் இடம் பெற்றுள்ளார்.

உலகம் ழுழுவதுமே பல்வேறு நாடுகளில் அரசுத்துறை மூலம் தொடங்கப்பட்ட பல இரும்பு ஆலைகள் நஷ்டம்காரணமாக கைவிடப்பட்டுவிட்டன. இந்த ஆலைகளையெல்லாம் தேடிப்பிடித்து வாங்கி அவற்றை லாபகரமாகஇயங்க வைப்பது தான் மிட்டலின் பொழுது போக்கே. இதுவரை நூற்றுக்கணக்கான நஷ்டத்தில் இயங்கும்இரும்பு ஆலைகளை வாங்கி அவற்றை லாபம் ஈட்டும் ஆலைகளாக மாற்றியுள்ளார். இஸ்பாத் சர்வதேசஇரும்பாலையின் தலைவரான லட்சுமி மிட்டலுக்கு வயது 50.

இவரது ஆலைகளில் சுமார் 74,000 பேர் பணி புரிகின்றனர். இப்போதைய தொழில்துறை மந்திரமானஆலைகளை சிறிதாக்கி, வேலையாட்களை குறைப்பதில் இவருக்கு நம்பிக்கை இல்லை. இஸ்பாத் நிறுவனத்தைமேலும் விரிவாக்குவேன். உலகம் முழுவதும் வாடிக்கையாளர்களை வைத்துக் கொண்டு ஊழியர்களின்எண்ணிக்கையை குறைப்பது முறையல்ல என்கிறார் மிட்டல்.

மிட்டலின் நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் 20 மில்லியன் டன் இரும்பை உற்பத்தி செய்கின்றன. இது உலகின்இரும்பு உற்பத்தியில் 2.5 சதவீதமாகும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X