அனைத்து சி.பி.எஸ்.சி. பள்ளிகளிலும் சாப்ட்வேர் கல்வி: அரசு திட்டம்
டெல்லி:
இந்தியா முழுவதும் சுமார் 6,000 சி.பி.எஸ்.சி. பள்ளிகளிலும் உடனடியாக கம்ப்யூட்டர் சாப்ட்வேர் கல்வியைஅறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
9ம் வகுப்பு, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் கட்டமாக இந்த சாப்ட்வேர் கல்வி அறிமுகமாகும். 9ம் வகுப்புமாணவர்களுக்கான பாடத் திட்டத்தில், எம்.எஸ். ஆபிஸ், ஐ லீப், பன்மொழி சாப்ட்வேர்கள் ஆகியவை அடங்கும்.
10ம் வகுப்பு மாணவர்களுக்கு வெப் டிசைனிங், இன்டர்நெட், அதை பயன்படுத்தும் முறை ஆகியவை குறித்துபோதிக்கப்படும்.
அடுத்த ஆண்டுக்கான பாடத் திட்டங்கள் இறுதி செய்யப்பட்டுவிட்டதால், இந்த ஐ.டி. பாடம் ஒரு விருப்பப்பாடமாகத்தான் (ஆப்ஷனல்) அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பின்னர் இது கட்டாயப் பாடமாக்கப்படும்.
11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் உள்ளது.
இந்திய அரசின் மக்களுக்காக ஐ.டி என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. தங்களதுரிப்போர்ட்டுகள், பள்ளி அறிக்கைகள் ஆகியவற்றை கம்ப்யூட்டரிலேயே வடிவமைக்குமாறு மாணவர்கள்கோரப்படுவார்கள்.