தூத்துக்குடியில் புதிய மருத்துவக் கல்லூரி
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவக் கலலூரி வரும் 16ம் தேதி முதல்இயங்கத் துவங்கும்.
தொடங்கப்பட்டும் தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்து இருந்தார். இதற்கானஏற்பாடுகளும் துரிதமாக நடந்தன.
இதையொட்டி கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி டெல்லியில் உள்ள இந்திய மருத்துவக்கவுன்சில் தலைவர் டாக்டர் சுக்ரே. உறுப்பினர் காந்தா, ஆகியோர் தூத்துக்குடி வந்துமருத்துவக் கல்லூரி பணிகளை ஆய்வு செய்து ஒப்புதல் அளித்தார்.
தூத்துக்குடி பீச் ரோட்டில் தற்காலிக கட்டிடத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டுஉள்ளது. இந்த ஆண்டு முதல் இந்த மருத்துவக் கல்லூரி செயல்பட மாணவ,மாணவிகள் சேர்க்கையும் நடைபெற்றது.
இதுவரை 29 மாணவிகளும். 34 மாணவர்களும் மருத்துவக் கல்லூரியில்சேர்ந்துள்ளனர். மருத்துவக் கல்லூரி வருகின்ற 16-ம் தேதி முதல் செயல்படத்தொடங்குகிறது.
மேலும் மருத்துவக் கல்லூரிக்கு சொந்த கட்டிடம் பாளையங்கோட்டை ரோட்டில் உள்ளஅரசு பாலிடெக்னிக் அருகில் 30 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் முதல் கட்டமாக கட்டிடம் கட்டுவதற்கு 15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும். தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி டீன்டாக்டர் பொன் சித்தன் இதை தெரிவித்தார்.