மாவீரன்யா வீரப்பன்! புகழ்கிறார் சோ.பா
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பன் மாவீரன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் கூறினார்.
சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:
வீரப்பனின் நடவடிக்கைகளை தமிழக மக்கள் பல ஆண்டுகளாக நன்றாக அறிவார்கள். இப்போது சந்தனக் கடத்தல்வீரப்பனின் பெயரால் வருகிற கோரிக்கைகளெல்லாம் அவரின் பின்னால் இருந்து இயக்குகிறவர்களின்கோரிக்கைகள் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.
நடிகர் ராஜ்குமார் கர்நாடக மாநிலத்தில் புகழ்பெற்ற பெரிய நடிகர். அவருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால்கர்நாடக மாநிலத்தில் வாழும் தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்படுவது நிச்சயம்.
கர்நாடக மாநிலத்தில் வாழும் தமிழர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வீரப்பனின் கோரிக்கையை ஏற்றுஉடனடியாக ராஜ்குமாரை விடுவிக்கும் ஏற்பாடுகளில் இரு மாநில அரசுகளும் தீவிரம் காட்டியிருப்பதுவரவேற்கத்தக்கது.
வீரப்பனின் பின்னால் இருப்பது யார் என்று இப்போது பேசி குழப்பத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. சந்தனக்கடத்தல் வீரப்பனின் நடவடிக்கைகளுக்கும், அவர் இப்போது விடுத்துள்ள கோரிக்கைகளுக்கும் தொடர்பு இல்லை.
நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க அரசு முழு கவனம் செலுத்தி, எடுத்துக் கொண்டிருக்கும் நடவடிக்கைகள் முழுதிருப்தி அளிக்கிறது.
வீரப்பன் ஒரு மாவீரன் என்பதை பலமுறை நிருபித்திருக்கிறான். அதனால் இனிமேலும் வீரப்பன் இதுபோன்றநடவடிக்கைகளில் ஈடுபடாமல் மத்திய, மாநில அரசுகளின் வேண்டுகோளுக்கு உட்பட்டு சட்டப்படியானநடவடிக்கைகளுக்கு உள்ளாவதுதான் நல்லது.
பொதுமன்னிப்பு வழங்குவது என்பது இயலாத காரியம். பூலான்தேவிக்குக்கூட தண்டனை கொடுத்த பின்தான்அரசு பொதுமன்னிப்பு கொடுத்தது. அதுபோல சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்குப் பிறகுதான் அரசுபொதுமன்னிப்பு வழங்க முடியும் என்றார் சோ.பாலகிருஷ்ணன்.