உதயமாகிறது யாதவர் கட்சி
சென்னை:
தமிழகத்தில் புதிது புதிதாக ஜாதிக் கட்சிகள் தோன்றிக் கொண்டிருக்கின்றன. இந்தநிலையில் யாதவர் சமுதாயத்திற்காகவும் ஒரு புதிய கட்சி உதயமாக இருக்கிறது.
இது குறித்து யாதவர் மகாசபையின் மாநிலத் தலைவர் எம். கோபாலகிருஷ்ணன்,பொதுச் செயலாளர் கலைமணி, மாநிலப் பொருளாளர் என்.ராஜாமணி ஆகியோர்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வருகின்ற 25-ம் தேதி, திருவண்ணாமலையில் தமிழகமே வியக்கும் வண்ணம் புதியஅரசியல் கட்சி உதயமாக இருக்கிறது. கட்சியின் கொடியும், பெயரும் வெளியிடப்படஇருக்கிறது.
அதனைத் தொடர்ந்து 27-ம் தேதி கோவையிலும், 30-ம் தேதி தஞ்சையிலும்,செப்டம்பர் 2-ம் தேதி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலும், 13-ம் தேதிமதுரையிலும் புதிய கட்சியின் மாநில மாநாடு நடக்க இருக்கிறது.
அதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெறுகினறன. இந்த புதிய கட்சியின் மாநாடுகளில்யாதவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தமக்களும் லட்சக்கணக்கில் பங்கேற்க இருக்கிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.