காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் - 3 ராணுவத்தினர் சாவு
Subscribe to Oneindia Tamil
ஜம்மு:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்தி ராக்கெட் தாக்குதலில் 3ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
பனிஹாலில் உள்ள ராணுவ வீரர்கள் முகாம் மீது திங்கள்கிழமை இத் தாக்குதல்நடத்தப்பட்டது.
இத் தாக்குதலில் 12 ராணுவத்தினர் படுகாயமடைந்தனர். அவர்கள் உத்தம்பூர் ராணுவமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இறந்தவர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர் பெயர் சுப்பிரமணியம்என்று தெரியவந்துள்ளது.
இத் தாக்குதலை அடுத்து பனிஹால் பகுதியில் பாதுகாப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது.தீவிரவாதிகளைப் பிடிக்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications