For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உண்மையை உணர உண்மையான வழி...

By Staff
Google Oneindia Tamil News

சமநிலை உள்ளவர்கள்தான் உள்ளது உள்ளபடி - உண்மையாக உலகத்தைப் புரிந்துகொள்கிறார்கள். சமநிலை இழந்தவர்கள் தவறுதலாகத்தான் உலகைப் புரிந்துகொள்வார்கள்.

சுவாமி சித்பவானந்தர் இக்கருத்தை அழகாக விளக்கியுள்ளார். உடைந்துவிட்டகண்ணாடியில் சமம் அற்ற கண்ணாடிப் பரப்பில் - உருவங்கள் சிதறிபின்னப்பட்டுத்தான் தெரியும்.

உடையாத சமமான கண்ணாடியில்தான் உள்ளது உள்ளபடி தெரியும். எனவேசமநிலையில் உலகைப் பார்க்கப் பழக வேண்டும் என்பது அவரது அறிவுரை.

துளசிதாசர் இராமாயணம் எழுதும் போது அசோக வனத்தில் இருந்த வெள்ளைமலர்கள் என்று எழுதினார். உடனே அனுமன் குறுக்கிட்டு அங்கு வெள்ளை மலர்கள்இல்லை. அந்த மலர்கள் சிகப்பு நிறம் என்றார். இல்லை அந்த மலர்கள்வெள்ளைதான் என்றார் துளசி. ஸ்வாமி நான் நேரில் பார்த்தவன்... நான்சொல்கிறேன்... நம்ப மாட்டீர்களா? என்று சொல்லிவிட்டு, ராமனிடம் போய்முறையிட்டார்..

துளசி எழுதியதுதான் சரி... மலர்கள் வெள்ளைதான். அப்போது ஆஞ்சநேயாகோபத்தில் உன் கண்கள் சிவந்திருந்தன... அதனால் மலர்கள் உனக்குச் சிவப்பாகத்தெரிந்தன என்றார் ராமர் என்று ஒரு கதை உண்டு.

உணர்ச்சிவசப்பட்டால் தவறான முடிவுகள் எடுக்க நேரிடும். உணர்ச்சிவசப்படாதபார்வைதான் உண்மையை உணர உண்மையான வழி.

இப்படிப்பட்ட சமநிலையுடைய யோகியாக வாழ்கிறவன் ஸ்திதப்ரக்ஞன் என்று கீதைவர்ணிக்கிறது.

ஸ்திதப்ரக்ஞன் என்கிற இந்தச் சான்றிதழுக்காக வாழ்வின் சுவையான பகுதிகளைஇழந்துவிட முடியுமா? என்று பலர் நினைக்கக்கூடும். உணர்ச்சிகளற்ற ஜடம் போல்இருக்கும் நிலையல்லவா அது என்று பலர் வெறுப்படையக் கூடும். உண்மைஅதுவல்ல.

ஞானிகள் துன்பத்திற்குத் துன்பப்பட மாட்டார்களே ஒழிய துன்பத்தைத் துடைக்கமுன்வர மாட்டர்கள் என்று பொருள் இல்லை. அவர்கள் ஜடங்கள் அல்ல.

கீதை சொல்கிறபடி எப்போதும் இப்படி அறிவுசார்ந்த உணர்ச்சிகளை வென்றசமநிலையிலேயே இருக்க மனிதனால் முடியுமா? என்ற கேள்வியை எழுப்பினால்அதற்கும் விடை தருகின்றார் ஆச்சார்யா வினோபா பாவே.

கொஞ்சம் பக்தியை வாழ்வில் கலந்து விட்டால் இது சாத்தியம் என்பதே அவரதுகண்டுபிடிப்பு. கடவுள் மேல் பாரத்தைப் போட்டுவிட்டால் கஷ்டம் தெரியாது;இறைவன் தரும் இன்பம், உலகம் தரும் இன்பத்தை விட உயர்வாகவே இருக்கும்.

சிரமப்பட்டு படியேறி மாடிக்குப்போக முடியாதவர்கள் லிப்டின் துணையோடு மாடிக்குவந்தால் குற்றம் இல்லைதானே? அதுபோல் வாழ்க்கையில் இயல்பான நல்லறிவால்உயர முடியாதவர்கள் பக்தியின் மூலம் சுலபமாக உயர்வது குற்றமல்ல என்பது அவர்முடிவு.

எல்லாம் பகவான் செயல் என்று பக்தன் தீர்மானிப்பதால் கர்மயோகி மற்றும்ஞானயோகியின் மனோநிலையைப் பக்தனும் அடைந்து விடுகிறான்.

அடுத்து இந்தச் சமநிலையை எந்தப் புத்தகத்தில் படித்துத் தெரிந்து கொள்ள முடியும்.?எந்த பல்கலைக் கழகத்தின் பாடத் திட்டத்தில் இந்தச் சமநிலை போதிக்கப்படுகிறது?எப்படிக் கற்றுக்கொள்வது என்று கேள்வி வருகிறது.

அர்ச்சுனன் கேட்கும் கேள்விக்கு பகவான் சொல்லும் விடை தெளிவானது.சுவையானது.

சாதுக்களிடம் போய்ப் படி என்கிறார் கண்ணன். அர்ச்சுனா! பணிந்து கேட்டும்பணிவிடை புரிந்தும் நீ இதை அறிந்து கொள்க. உண்மையை உணர்ந்த ஞானிகள்உனக்கு இந்த ஞானத்தை உபதேசிப்பார்கள்! என்கிறார் பகவான்.

ஆம். சமநிலை பெறுகிற ரகசியத்தைப் புத்தகங்கள் மூலம் படித்து தெரிந்து கொள்ளமுடியாது. ஞானிகள், ரிஷிகள், சான்றோர்கள் மூலமே கற்க முடியும்.

புத்தகம் மூலம் படித்து அனுபவம் பெற முடியாதா என்றால் அது அரை குறைதான்.ஒருவர் தபால் கல்வி மூலமே நீச்சல் படித்திருக்கிறேன் என்றால் அதை நம்பி அவரைத்தண்ணீரில் தூக்கிப் போட முடியுமா? யோசியுங்கள்.

(தொடரும்)
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X