For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதி ஓய்வு பெறுவது நல்லது .. சுலோச்சனா சம்பத்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பெரியாரின் லட்சியங்கள் ஈடேறவும், வெற்றி பெறவும் உண்மையாக உழைத்தவர்கள்எம்ஜிஆரும், ஜெயலலிதாவும்தான் என்று முதல்வர் கருணாநிதிக்கு அதிமுக தரப்பில்சூடான பதில் அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுக சார்பில் மகளிர் அணித் தலைவி சுலோசனா சம்பத் வெளியிட்ட அறிக்கை:

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி.வீரமணி கூட்டிய அனைத்து கட்சிக் கூட்டத்தில்பெரியார் பிறந்த நாள் விழாவை ஜெயலலிதா தலைமையில் நடத்துவது என்றுஅறிவிப்பு வெளிவந்தது.

உடனே கருணாநிதி, அவருக்கே உரிய வக்கிர புத்தியில் ஜெயலலிதா, பெரியார்விழாவுக்கு தலைமை ஏற்பது ஏமாற்று வித்தை என்றும், உலகத்தின் ஒன்பதாவதுஅதிசயம் என்றும், பெரியார் லட்சியத்தை அடிப்படை அளவிலாவது ஏற்றுக்கொண்டவரா என்றும் கூர் மழுங்கிய வினாக் கணைகளைத் தொடுத்திருக்கிறார்.

பெரியாரின் அடிப்படைக் கொள்கைகளுக்கு விரோதமாக ஊரை ஏமாற்றும் உன்மத்தர்யார்? உதட்டளவில் சொல்லாமல் செயல் அளவில் பெரியாரின் லட்சிய வெற்றிகளுக்குவித்திட்டது யார் என்பதைக் கருணாநிதிக்கு மட்டுமல்ல ஊருக்கும் நினைவூட்டுவதுஎன் கடமை.

1971ல் சென்னை பெரியார் திடலில் பெரியார் தலைமையில் நடந்த கூட்டத்தில் பேசியஅன்றைய முதல்வர் கருணாநிதி, பெரியாரின் அடிப்படை கொள்கைகளுக்குவிரோதமாக "உலகத்தில் ஒரே கடவுள் உண்டு என்று நான் சொன்னால் அதைபெரியாரும் ஏற்றுக் கொள்வார் என்று பேசியபோது, மேடையிலே இருந்த பெரியார்உடனே கைத் தாங்கலாக எழுந்து "இல்லை நான் கருணாநிதி சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று இரு கைகளையும் அசைத்து சொன்னார்.

எதிரே இருந்த கருஞ்சட்டைத் தொண்டர்கள் பேசாதே உட்கார் என்று கருணாநிதியைமேற்கொண்டு பேசவிடாமல் தடுத்து உட்கார வைத்ததும், பிறகு நெடுஞ்செழியன்எழுந்து கூட்டத்தினரை அமைதிப்படுத்தியதும் யாரும் அதற்குள் மறந்து விடமுடியாது.

சாதியை ஒழிக்க மதம் தடையாக உள்ளது. மதத்தை ஒழிக்க கடவுள் தடையாக உள்ளது.எனவே கடவுளை ஒழிக்கப் புறப்பட்டேன் என்றாரே பெரியார். அந்த மதவாதச்சனாதனிகளுக்கு வெண்சாமரம் வீச புறப்பட்டு விட்டார் கருணாநிதி.

ஜோசியம், ஜாதகம், நேரம், காலம், மஞ்சள் துண்டு, தேரோட்டத் திருவிழா,குல்லாவுடன் நோன்பு கஞ்சி, கர்த்தரின் சிலுவை இத்யாதி இத்யாதிகளை செய்துகொண்டு நான் பெரியார் வழி நடப்பவன் என்று கூறி அப்பாவித் தொண்டர்களைஏமாற்றுகிறார்.

தன் குடும்பத்தாரை வாழ வைக்கும் குல தெய்வங்களுக்கு கிடா வெட்டி யாகம்வளர்த்து பரிகாரம் தேடும் கருணாநிதி செய்வது ஏமாற்று வித்தையா அல்லது பெரியார்வழியா?

எம்.ஜி.ஆர். ஆட்சியில் தான்1977ல் பெரியாரின் நூற்றாண்டு விழாவை அரசுவிழாவாக அறிவித்து ஓராண்டு காலம் நாடெங்கும் கொண்டாடப்பட்டது. பெரியாரின்தமிழ் எழுத்துச் சீர்திருத்தங்கள் சட்டமாக்கப்பட்டது. பெரியாரின் சுயமரியாதைநினைவுச் சுடர் தூண்கள் தமிழகம் எங்கும் நிறுவப்பட்டன.

பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை ஒளி, ஒலி நாடகக் காட்சிகள் நாடெங்கும்காட்டப்பட்டது. வல்லத்தில் பெரியார் மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரிதொடங்க அரசுக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலம் பெரியார் அறக்கட்டளைக்குவழங்கப்பட்டது.

அதற்கு பிறகு ஜெயலலிதா ஆட்சியில் தான் பெரியார் மணியம்மை கல்லூரியின்வளர்ச்சிக்காக 5 லட்சம் ரூபாய் வழங்கியதோடு, பெரியாரின் நீண்ட நாள் உயிர் மூச்சுக்கொள்கையான தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் நலன் காக்கும் 69 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றினார். அதை இந்திய அரசியல்சட்டத்தில் 76-வது சட்டத் திருத்தம் செய்து, 9-வது அட்டவணையில் இடம் பெறச்செய்த வரலாற்றுச் சாதனை நடைபெற்றது.

மதவாத ஆர்.எஸ்.எஸ்.காரர்களால் அடக்கி வைக்கப்பட்ட அந்த சட்டத்தைநடைமுறைப்படுத்த மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கருணாநிதி செயலற்று இருப்பதுபெரியார் லட்சியத்திற்கு செய்யும் துரோகம் அல்லவா?

அண்மையில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிஇருந்ததை ஜெயலலிதாவின் ஏமாற்று வித்தை என்றார் கருணாநிதி. இவர் பக்ரீத்,கிறிஸ்துமஸ், இந்துமத சாஸ்திரப்படி வரும் சித்திரை வருடப் பிறப்பு போன்றபண்டிகைகளுக்கு கூறும் வாழ்த்துச் செய்திகளுக்கு என்ன பெயர்?

ஓடாத திருவாரூர் தேரை ஓட்டிக் காட்டியதை தன்னுடைய சாதனையாக்கிக் கொண்டகருணாநிதி, "நாஞ்சில் மனோகரன் உடல் நிலம் பெற கடவுளைப் பிரார்த்திக்கிறேன்என்று கூறிய கருணாநிதி, பெரியாரின் அடிப்படைக் கொள்கையில் உறுதி உள்ளவரா?

பெரியார் லட்சியங்கள் ஈடேறவும் வெற்றி பெறவும் உண்மையாக உழைத்தவர்கள்,பெரியார், அண்ணா குடும்ப வாரிசுகளுக்குத் துணையாகவும் பாதுகாப்பு அரணாகவும்நின்றவர்கள் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் தான்.

எனவே ஜெயலலிதாவை பற்றி தூற்றுவதே தன் தலையாய வேலையாகக்கொண்டிருக்கிற கருணாநிதி, நினைவாற்றல் குறைந்த வயோதிக காலத்தில் சாய்வுநாற்காலியில் ஓய்வு எடுத்துக் கொள்வது அவருக்கும், நாட்டிற்கும் நில்லது என்றுகூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X