For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

73 வயதில் புது வாழ்வு பெறுகிறார் "காந்தி கார்த்தியாயினி"

By Staff
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்:

தனது 7-வது வயதில் மகாத்மா காந்திக்கு மலர்மாலை சூட்டிய கார்த்தியாயினிக்குப் புது வீடு கட்டித் தருவது உள்பட வேறு பல உதவிகளைச் செய்ய கேரளஅரசு திட்டமிட்டுள்ளது.

கொச்சியிலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் கார்த்தியாயினி. 1937-ம்ஆண்டு அவருக்கு 7 வயதாக இருந்தபோது அவரது கிராமத்துக்கு தேசத் தந்தை மகாத்மா காந்தி வந்தார்.

ஏழைகளுக்கு உதவுவதற்காக நிதி திரட்ட வந்த காந்தியைப் பார்க்க ஏராளமானவர்கள் குழுமியிருந்தனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில்கார்த்தியாயினி தான் கொண்டு சென்ற மலர்மாலையை காந்தியின் கழுத்தில் போட்டார்.

காந்தியும் மிகவும் சந்தோஷமாக அந்த மாலையை ஏற்றுக் கொண்டு கார்த்தியாயினியைத் தூக்கிக் கொஞ்சினார். அன்று முதல் கார்த்தியாயினி, காந்திகார்த்தியாயினி என்று அழைக்கப்பட்டார்.

இப்போது அவருக்கு 73 வயதாகிறது. இன்னும் அவர் அந்த சம்பவத்தை மறக்கவில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் குழுமியிருந்த அந்த நேரத்தில்காந்திக்கு மாலை அணிவிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

யாரும் எதிர்பார்க்கத நேரத்தில் நான் அவரைத் தொட்டுப் பார்த்து மகிழ்ந்தேன். பஞ்சைப் போல் அவரது உடல் மிகவும் மென்மையாக இருந்தது என்றுஅந்தநாள் சம்பவத்தை அவர் நினைவு கூறுகிறார் கார்த்தியாயினி.

ஆனால் அத்தகைய பெருமையைப் பெற்ற அவர் இப்போது மிகவும் ஏழ்மையான நிலையில் வசித்து வருகிறார்.

இடுக்கி நகராட்சியில் பகுதி நேர துப்புரவுத் தொழிலாளியாகப் பணியாற்றியதற்காக தற்போது அவருக்கு சொற்பத் தொகை ஓய்வூதியமாகவழங்கப்பட்டு வருகிறது.

கூட்டுக் குடும்பத்தில் மிகவும் நோய்வாய்பட்ட நிலையில் அவர் வாழ்நாளைக் கழித்து வருகிறார்.

அவரைப் பற்றிய ஒரு செய்திப் படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அந்த படத்தைப் பார்த்த பிறகுதான் உள்ளூர் நகராட்சி விழித்துக் கொண்டுஅவருக்கு உதவ முன் வந்துள்ளது.

காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதிக்கு முன்தினம் இப் படம் ஒளிபரப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து கொச்சி மாவட்ட கலெக்டர்விஸ்வாம்பரன், உள்ளூர் எம்.எல்.ஏ. ராஜு உள்ளிட்ட ஏராளமானவர்கள் கார்த்தியாயினி வீட்டுக்கு வந்து அவரை நலம் விசாரித்தனர்.

கார்த்தியாயினிக்கு புது வீடு கட்டித் தர கேரள அரசு தயாராக உள்ளது. அவர் விரும்பினால் அவரது நிலத்திலோ அல்லது வேறு எங்காவது வீடு கட்டித்தரப்படும்.

அரசு தரப்பில் அளிக்கப்படும் உதவிகளுடன், கார்த்தியாயினிக்கு உதவும் படி வேறு அமைப்புகளையும் நாங்கள் கேட்டுக் கொள்ள இருக்கிறோம்.இப்போது அவரது அவசர தேவைக்காக முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 ஆயிரம் வழங்கியிருக்கிறோம் என்றார் விஸ்வாம்பரன்.

அதன்பிறகு கலெக்டரின் காரிலேயே சென்று கொச்சியின் மையப் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு கார்த்தியாயினி மாலை அணிவித்தார். அந் நிகழ்ச்சியில் பேசியவிஸ்வாம்பரன், இனி ஒவ்வொரு ஆண்டும் காந்தி பிறந்த நாளன்று காந்தி சிலைக்கு கார்த்தியாயினி மாலை அணிவிப்பார் என்று அறிவித்தார்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X