For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டான்சி வழக்கில் நாளை தீர்ப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும், ஜெயலலிதா மீதான டான்சி நில பேர ஊழல்வழக்கில் திங்கள்கிழமையன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தமிழக அரசுமேற்கொண்டுள்ளது.

இதற்கு முன், கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் கடந்த ஜனவரிமாதம் ஜெயலலிதாவுக்குத் தண்டனை வழங்கப்பட்டது.

அப்போது தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பெரும் போராட்டத்திலும், வன்முறைநடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.

தர்மபுரி அருகே கல்லூரி பஸ்ஸை சில அதிகமுகவினர் எரித்தனர். இச் சம்பவத்தில்கோவை வேளாண் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த 3 மாணவிகள் கருகி இறந்தனர்.

இதையடுத்து டான்சி வழக்கிலும் ஜெயலலிதாவுக்கு எதிராகத் தீர்ப்பு அளிக்கப்படும்பட்சத்தில் அதிமுகவினர் மீண்டும் வன்முறையில் இறங்கக்கூடும் என்றமுன்னெச்சரிக்கையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் அ.தி.மு.கழகத்தின் மாவட்டச் செயலாளர்களை சென்னைக்கு அழைத்துஆலோசனை நடத்தியிருக்கிறார் ஜெயலலிதா.

வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தில் விருதுநகர், கோவை, திருவண்ணாமலை உட்பட15 மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

வருகின்ற 10-ம் தேதி சென்னையில் பொதுக்குழு நடத்தப்படும் என்று அ.தி.மு.க.தலைமை அறிவித்திருக்கிறது. இந் நிலையில் அதற்கு முன்னதாக மாவட்டசெயலாளர்கள் கூட்டம் நடந்தது பற்றி பரபரப்பாக தமிழக அரசியல் களத்தில்பேசப்பட்டு வருகிறது.

டிசம்பர் மாதம் ஜெயலலிதா மேற்கொள்ள இருக்கும் சுற்றுப்பயணம் குறித்துகூட்டத்தில் பேசப்பட்டது என்று சொன்னாலும், தமிழக உளவுத்துறை மிகவும்உன்னிப்பாக கூட்டத்தில் என்ன நடந்தது என்று விசாரித்து வருகிறார்கள்.

திங்கள்கிழமை வரவிருக்கும் டான்சி நில பேர வழக்கு தீர்ப்பு ஒரு வேளை அ.தி.மு.க.தலைவி ஜெயலலிதாவிற்கு சாதமாக அமையாமல் போனால் போராட்டம் நடத்தவேண்டும்.

சிறை நிரப்பும் போராட்டம் போன்றவை நடத்தவே மாவட்ட செயலாளர்கள் கூட்டம்அவசர அவசரமாக நடத்தப்பட்டுள்ளது என்கிறார்கள் தமிழக காவல் துறைஅதிகாரிகள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X