For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாருதி நிறுவன ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

மாருதி உத்யோக் லிமிடெட் நிறுவனத்தின் 4700 ஊழியர்கள் வியாழக்கிழமை திடீர்வேலைநிறுத்தத்தில் இறங்கினர். இதனால் நிறுவனத்தின் 86 சதவீத உற்பத்திப் பணிகள்ஸ்தம்பித்தன.

இதுகுறித்து மாருதி உத்யோக் நிறுவன நிதித்துறை இயக்குநர் ஏ.ஆர்.ஹலஸ்யம்கூறுகையில், கார் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டது. இருப்பினும் இருந்த சிலஊழியர்களை வைத்துப் பணிகள் நடந்தன.

இனிமேல் வேலைநிறுத்தம் போன்ற நிறுவனத்தைப் பாதிக்கும் செயல்களில் ஈடுபடமாட்டோம் என்று எழுத்துப் பூர்வமாக எழுதிக் கொடுக்குமாறு நிறுவனம் பிறப்பித்தஉத்தரவை எதிர்த்து இந்த வேலைநிறுத்தம் நடந்தது.

தினசரி 1500 கார்கள் உற்பத்தி செய்யப்படுவது வழக்கம். வேலைநிறுத்தம் காரணமாகவியாழக்கிழமை 200 கார்களே தயாரிக்க முடிந்தது. வேலைநிறுத்தம்சட்டவிரோதமானது.

கம்பெனி சட்டப்படி நிறுவன பணிகளுக்கு ஊழியர்கள் குந்தகம் விளைவிக்கும்வகையில் செயல்படக் கூடாது என்றார்.

ஊழியர் சங்க பொருளாளரும், செய்தித்தொடர்பாளருமான வாலியா கூறுகையில்,வியாழக்கிழமை காலை ஊழியர்கள் பணிக்கு வந்தபோது, திடீரென ஒருஅறிக்கையைக் காட்டி, இனிமேல் ஸ்டிரைக்கில் ஈடுபட மாட்டோம் என்றுகையெழுத்திடுமாறு நிர்வாகம் வலியுறுத்தியது. இது நியாயமற்றது.

இதுபோன்ற உத்தரவில் கையெழுத்திடுவது எங்களது அடிப்படை உரிமைகளைப்பறிப்பதாகும். இதை எதிர்த்துதான் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்தோம்.உண்மையில் வேலை பார்க்கும் எண்ணத்தில்தான் நிறுவனத்திற்கு வந்தோம். ஆனால்நிர்வாகம் எங்களை ஸ்டிரைக்கில் தள்ளி விட்டு விட்டது என்றார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X