For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யாழ்பாணத்தில் மீண்டும் வென்ற டி.யூ.எல்.எப்.

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

விடுதலைப் புலிகளால் விரட்டி அடிக்கப்பட்ட தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி (டி.யூ.எல்.எப்.) நேற்று முன்தினம் நடந்த தேர்தலில் யாழ்பாணத்தில் 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

வட யாழ்பாணத்தில் இருந்து இந்த அமைப்பு புலிகளால் அடியோடு விரட்டி அடிக்கப்பட்டது. இதனால் 1994ம்ஆண்டு நடந்த தேர்தலில் இந்த அமைப்பு போட்டியிடவில்லை. ஆனால், இப்போதைய தேர்தலில் யாழ்பாணத்தில்9 இடங்களில் போட்டியிட்டது.

இதில் 3 இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளது. போர், ரத்தம், துப்பாக்கிகளால் வாழ்க்கை இழந்த யாழ்பாண மக்கள்ஜனநாயகம் மற்றும் அமைதிக்காக ஏங்குவதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

இது தவிர கிழக்கு பட்டிகலோவா மாவட்டத்திலும் கடந்த முறை வென்றதைப் போல 2 இடங்களில் இந்தக் கட்சிவெற்றி பெற்றுள்ளது.

இது குறித்து கட்சியின் துணைத் தலைவர் அனந்தசாகரே கூறுகையில், புலிகள் எங்களை எந்த அளவுக்குப்பொறுத்துக் கொள்ளப் போகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், இது தான் யாழ்பாண மக்கள் கொடுத்துள்ளதீர்ப்பு.

ஈழ மக்கள் விடுதலை முன்னணியினர் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடாமல் இருந்திருந்தால், வாக்காளர்களைபுலிகள் துப்பாக்கிளால் சுட்டு மிரட்டாமல் இருந்திருந்தால் நாங்கள் இன்னும் அதிக இடங்களில் வென்றிருப்போம்என்றார்.

யாழ்பாணத்திலிருந்து புலிகளால் விரட்டி அடிக்கப்பட்ட இந்த அமைப்பு கொழம்புவில் தான் இயங்கி வந்தது.1998ம் ஆண்டு நடந்த யாழ்பாண நகராட்சித் தேர்தலில் போட்டியிட்டது. வெற்றியும் பெற்றது. ஆனால், இந்தக்கட்சியின் 2 மேயர்களை புலிகள் சுட்டுக் கொன்றனர். இதையடுத்து இந்தக் கட்சியின் பிற நகராட்சி உறுப்பினர்கள்யாழ்பாணத்தை விட்டு வெளியேறினர்.

இப்போது இலங்கையில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் ஆட்சியை மீண்டும் பிடிக்க சந்திரிகாவின் மக்கள்கூட்டணியும், எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிய கட்சிகளை குறி வைத்து வருகின்றன.டி.யூ.எல்.எப்க்கும் இந்தக் கட்சிகள் வலை வீசி வருகின்றன.

ஆனால், சந்திரிகாவுக்கு ஆதரவு தர மாட்டோம் என்கிறார் ஆனந்தசாகரே. எங்களை சந்திரிகா கேவலமாகநடத்தினார். முறைகேடுகளில் ஈடுபட ஈ.பி.டி.பி. கட்சியைத் தூண்டிவிட்டார். அவர்களுக்கு ஆயுதங்களையும்கொடுத்தார். இப் பிரச்சனையை தீர்ப்பார் என நம்பி கடந்த முறை அவரை ஆதரித்தோம். இனி ஆதரிக்கமாட்டோம்.

விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என விக்கிரமசிங்கே அறிவித்தால், அவரது ஐக்கிய தேசியகட்சிக்கு ஆதரவு தருவோம். உடனடியாக போரை நிறுத்த வேண்டும், புலிகளும் ஏற்றுக் கொள்ளும் வகையில்பிரச்சனக்கு தீர்வை அறிவிக்க வேண்டும் என்றார்.

யாழ்பாணத்தில் புலிகள் ஆயுதம் ஏந்தி போராட்டம் தொடங்குவதற்கு முன் வரை டி.யூ.எல்.எப். மிக சக்தி வாய்ந்தஅமைப்பாக விளங்கி வந்தது. பின்னர் பலமிழந்தது. இப்போது மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.

இது தவிர புலிகளின் ஆதரவுக் கட்சியான அனைத்து சிலோன் தமிழ் காங்கிரஸ் கட்சியும், யூ.என்.பியும்யாழ்பாணத்தில் தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X