இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக வர விரும்பாத மார்ஷ்

Subscribe to Oneindia Tamil

பெர்த் (ஆஸ்திரேலியா):

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க ஆஸ்திரேலியஅணியின் முன்னாள் துணை கேப்டன் ஜியாஃப் மார்ஷ் அவ்வளவாக ஆர்வம்காட்டவில்லை என்று தெரிகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த கபில்தேவ் மீது மேட்ச் பிக்ஸிங்குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதையடுத்து பயிற்சியாளர் பதவியை அவர் ராஜிநாமாசெய்தார்.

கென்யாவில் நடைபெற்ற ஐ.சி.சி. நாக்-அவுட் கிரிக்கெட் போட்டி தொடங்க இருந்தநிலையில் அவர் ராஜிநாமா செய்ததை அடுத்து அவசரஅவசரமாக ஏற்கெனவேபயிற்சியாளராக இருந்த கெய்க்வாட் மீண்டும் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

ஆனால், வெளிநாட்டுப் பயிற்சியாளரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதுஎன்றும், நவம்பர் மாதம் இறுதி வரை இந்திய அணியின் பயிற்சியாளராக கெய்க்வாட்இருப்பார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது.

வெளிநாட்டுப் பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜான் ரைட்.ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர்கள் மார்ஷ் மற்றும் டீன் ஜோன்ஸ் ஆகியோரதுபெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இறுதியில் மார்ஷ் பயிற்சியாளராகநியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க மார்ஷ் அவ்வளவாகஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. குடும்பப் பிரச்சினை காரணமாகஎன்னால் பயிற்சியாளர் பொறுப்பே ஏற்க முடியாது.

ஆகவே, பரிசீலனைப் பட்டியலில் இருந்து எனது பெயரை நீக்கிவிடுங்கள் என்றுமேற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் மூலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுவாரியத்துக்கு மார்ஷ் அறிக்கை அனுப்பியுள்ளார்.

மேற்படி காரணங்களுக்காகவே ஆஸ்திரேலிய பயிற்சியாளர் பதவியை 1999-ம்ஆண்டு நான் ராஜிநாமா செய்தேன் என்று அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து ராஜிநாமாசெய்துவிட்டாலும், தொடர்ந்து அவர் 4 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணிதேர்வாளர் குழுவில் இடம் பெற்றுள்ளார்.

இதையடுத்து மீதமுள்ள ஜான் ரைட் அல்லது டீன் ஜோன்ஸ் இருவரில் ஒருவர் இந்தியஅணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...