For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீரப்பன்-விடுதலைப் புலிகள் தொடர்பு: உச்ச நீதிமன்றம் கவலை

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

வீரப்பனுக்கும், விடுதலைப் புலிகளுக்கும், தமிழ் தேசிய விடுதலைப் படை போன்ற பிரிவினைவாதக் கும்பலுக்கும்இடையிலான தொடர்பு கவலை அளிக்கிறது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

வீரப்பனை ஏன் கடந்த 10 ஆண்டுகளாகப் பிடிக்க முடியவில்லை என்பதை தமிழகமும், கர்நாடக அரசும் விளக்க வேண்டும்எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதே போல ராஜ்குமாரை விடுவிப்பதால் மட்டும் வீரப்பன் பிரச்சனை தீரப் போவதில்லை எனவும் உச்ச நீதிமன்றம்கூறியுள்ளது.

வீரப்பனின் நிபந்தனையான மைசூர் தடா தமிழ்க் கைதிகளை விடுவிப்பது, தமிழக சிறைகளில் உள்ள தமிழ்த் தேசியவிடுதலை இயக்கத்தைச் சேர்ந்த 5 பேரை விடுவிப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

மைசூர் தடா கைதிகளை விடுவிக்கவும், தமிழ்த் தீவிரவாதிகளை விடுவிக்கவும் இதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலதத்தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து கர்நாடகம் மேல் முறையீடு செய்தது.

இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. செவ்வாய்க்கிழமை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் எஸ்.பி. பரூச்சா, டி.பி. மோகாபத்ரா, ஒய்.கே. சபர்வால் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த வழக்கைவிசாரித்தனர்.

அப்போது டிவிஷன் பெஞ்ச்சின் தலைவரான நீதிபதி பரூச்சா கூறுகையில், வீரப்பனின் கோரிக்கையை தமிழக, கர்நாடகஅரசுகள் இன்று ஏற்றுக் கொண்டால், நாளை வீரப்பன் இன்னொருவரைக் கடத்திச் செல்வான். வீரப்பனுக்கு இது போன்றகடத்தல் புதிதல்ல. இன்று நேற்றல்ல, பல்லாண்டுகளாகவே இந்த கடத்தல் வேலையில் வீரப்பன் ஈடுபட்டுக் கொண்டு தான்இருக்கிறான்.

அவனைப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தாதவரை அவன் இதைச் செய்து கொண்டு தான் இருப்பான்.

ராஜ்குமாருக்கு ஏதாவது நேர்ந்தால், அதனால் வன்முறை வெடிக்கும், உயிர் பலிகள் ஏற்படும் என தமிழக, கர்நாடக அரசுகள்நம்புகின்றன. அரசுகளின் இந்த வெறும் நம்பிக்கையை மட்டும் வைத்துக் கொண்டு ஏதும் முடிவெடுக்க முடியாது. இந்தநம்பிக்கையை உறுதி செய்யும் ஆதாரங்கள் ஏதும் எங்களிடம் ஒப்படைக்கப்படவில்லை.

இந்த விஷயத்தில் அரசுகள் என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள் முடிவு செய்ய வேண்டியதில்லை. ஆனால்,ராஜ்குமாருக்கு ஏதாவது நேர்ந்தால் கர்நாடகத்தில் உள்ள தமிழர்கள் படுகொலை செய்யப்படுவார்கள் என்ற கர்நாடக அரசின்வாதத்தில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்பதைப் பார்க்க வேண்டும்.

இந்தப் பிரச்சனையால் நீதிமன்றம் வெறுத்துப் போயுள்ளது. இந்தப் பிரச்சனையை (வீரப்பனை) சரியாக கையாளாமல்விட்டதற்கு இரு மாநில அரசுகளும் சரியான விளக்கம் அளித்தாக வேண்டும். இல்லாவிட்டால், வீரப்பனின் கூட்டாளிகளின்நிபந்தைனையை ஏற்று தடா கைதிகளை விடுவிக்கும் இரு மாநில அரசுகளின் முடிவை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாது.

தமிழ் தேசிய விடுதல்ை படையின் தீவிரவாதியான ரேடியோ வெங்கடேசன் மீதான தடா வழக்கை தமிழக அரசு வாபஸ்பெற்றுள்ளது. இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சென்னை தடா நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இந்த ஆவணங்கள் எங்களுக்கு வந்து சேர வேண்டியதை சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் உறுதி செய்ய வேண்டும் என்றார் பரூச்சா.

நீதிபதி சபர்வால் கூறுகையில், இந்த தடா கைதிகளை திடீரென விடுதலை செய்து வெளியே விட்டால், இது சமூகத்தில் எந்தமாதிரியான ஒரு பாதிப்பை என்று யாராவது நினைத்துப் பார்த்தீர்களா?

இந்த வழக்கில் விசாரிக்கப்பட்ட சாட்சிகள், விசாரிக்கப்பட உள்ள சாட்சிகள் ஆகியோர் மீது இது என்ன பாதிப்பைஏற்படுத்தும் தெரியுமா? இவர்களை விடுவித்தால் காவல்துறை, காட்டில் அலைந்து திரிந்து இவர்களைப் பிடித்த சிறப்புப்பாதுகாப்புப் படை ஆகியவற்றின் மனபலம் பாதிக்கப்படாதா? எனக் கேட்டார்.

கர்நாடக அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ஹரீஷ் சால்வே கூறுகையில், நீதிமன்றத்தின் வருத்தத்தைகர்நாடகமும் புரிந்து கொண்டுள்ளது. அதை ஏற்றும் கொள்கிறது. ஆனால், இதுவரை என்னவெல்லாம் நடந்ததோ அதுதுரதிஷ்டவசமானது. ஆனால், இப்போது இதில் அரசியல் வாதங்களை எழுப்புவதை நீதிமன்றம் அனுமதிக்கக் கூடாதுஎன்றார்.

இந்த வாதங்களை அடுத்து வழக்கு புதன்கிழக்ைகு (நாளைக்கு) ஒத்தி வைக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X