For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெளிநாட்டில் பயன்படுத்திய கார்களை இந்தியாவுக்குக் கொண்டு வர தடை

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

வெளிநாட்டில் பயன்படுத்திய கார்களை இந்தியாவுக்குக் கொண்டு வரஅனுமதிக்கப்படாது என்று மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி தெரிவித்தார்.

டெல்லியில் நடைபெற்று வரும் பொருளாதார ஆசிரியர்கள் மாநாட்டில் அவர்பேசியதாவது:

வெளிநாட்டில் வசிப்பவர்கள் இந்தியாவுக்கு வரும்போது அந்நாட்டில் தான்பயன்படுத்திய கார்களைக் கொண்டு வருகின்றனர்.

இதனால், உள்நாட்டு கார் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது.இதையடுத்து வெளிநாட்டில் பயன்படுத்திய கார்களை இந்தியாவுக்குக் கொண்டு வரதடை விதிக்கப்படும்.

அதற்காக விரைவில் அமல்படுத்தப்படவுள்ள புதிய மோட்டார்வாகனக் கொள்கையில்சட்டதிட்டங்கள் கடுமையாக்கப்படும்.

நாட்டின் மொத்த உற்பத்தியில் மோட்டார் வாகனத் தொழில் 4 சதவீத பங்களிப்பைஅளிக்கிறது. ஆகவே, மோட்டார் வாகனத் தொழிலுக்குக் கூடுதல் கவனிப்பும், நிதிஒதுக்கீடும் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

உள்நாட்டு மோட்டார் வாகன உற்பத்தித் தொழில் மீதான பல கட்டுப்பாடுகள், உலகவர்த்தகக் கழகம் தெரிவித்த பரிந்துரைகளுக்கு உட்பட்டு தளர்த்தப்படும்.

வெளிநாட்டில் பயன்படுத்திய கார்களை இந்தியாவுக்குக் கொண்டு வந்தால் உள்நாட்டுகார் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கும் என்று உள்நாட்டு கார் உற்பத்தி நிறுவனங்கள்தவிர தேவூ, ஹூண்டாய் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களும் கவலைதெரிவித்துள்ளன.

உள்நாட்டுச் சந்தைக்குக் கூடுதல் வாய்ப்பை ஏற்படுத்தித் தரவும், இந்தியாவில் கார்உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கவும் வெளிநாடுகளில்பயன்படுத்திய கார்களை இந்தியாவுக்குக் கொண்டு வர தடை விதிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மோட்டார் வாகன உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தங்கள்நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் ஒரு குறிப்பிட்ட நிதியைமுதலீடு செய்யவேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும்.

அப்போதுதான் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் பொருட்களைக் கொண்டுஅதிக அளவில் மோட்டார் வாகனங்களை உற்பத்தி செய்யமுடியும் என்றார் முரளிமனோகர் ஜோஷி.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X