ஜெ.விடமிருந்து அழைப்பு இல்லை .. கூறுகிறார் ராமதாஸ்
டெல்லி:
சட்டசபைத் தேர்தலில் கூட்டணி வைத்துக் கொள்வது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடமிருந்து எந்த அழைப்பும் தனக்கு வரவில்லை எனபாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வாஜ்பாயை சந்திக்க ராம்தாஸ் டெல்லி சென்றுள்ளார். தனக்கும் தமிழக ராஜீவ்காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்திக்கும் இடையே நடைபெற்று வரும்அறிக்கைப் போர் பற்றியும், முதல்வர் கருணாநிதியின் செயல்பாடு பற்றியும்பிரதமரிடம் ராமதாஸ் புகார் கூறியதாக கூறப்படுகிறது.
பிரதமரைச் சந்தித்த பிறகு, ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், புதுவைசட்டமன்ற தேர்தலில் கண்ணன் தலைமையிலான புதுவை மாநில காங்கிரஸ் கட்சியுடன்கூட்டணி அமைத்து பா.ம.க. போட்டியிடும். வன்னியர் அல்லாத பலரும் எங்களுடன்கூட்டணி அமைத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர்.
வரும் சட்டசபைத் தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து தேர்தல்சமயத்தில் முடிவு செய்யப்படும். கூட்டணி தொடர்பாக ஜெயலலிதாவிடமிருந்து எந்தவிதமான அழைப்பும் வரவில்லை. எந்த விதமான பேச்சு வார்த்தையும் நடைபெறவும்இல்லை.
தற்போது தேசிய முன்னணி கூட்டணியில் அங்கம் வகிக்கிறேன். தொடர்ந்து அந்தக்கூட்டணியிலேயே நீடிக்க விரும்புகிறேன் என அவர் தெரிவித்தார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!