லாரி மீது ரயில் மோதியதில் 11 பேர் பலி
குவஹாத்தி:
பயணிகள் ரயில் ஒன்று தேயிலைத் தொழிலாளிகள் சென்று கொண்டிருந்த லாரியின் மீது மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர். 12 பேர்படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து அசாம் மாநிலம் ஜமுகுரி என்ற ஊரில் அதிகாலை 2.30க்கு நிகழ்ந்துள்ளது.
டின்சுகி என்ற இடத்திலிருந்து லும்டிங் என்ற இடத்திற்கு 500 பயணிகளுடன் ஒரு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் ஒரு இடத்தில்,ஆளில்லாத ரயில்வே கேட்டை கடக்கும் போது, ஜமுகுரியிலிருந்து தேயிலைத் தொழிலாளர்கள் 30 பேரை ஏற்றி வந்து கொண்டிருந்தலாரி, ரயில் மீது மோதியது.
இதில் அந்த லாரியில் பயணம் செய்தவர்களில் 11 பேர் இறந்தனர். 12 பேர் படுகாயமடைந்தனர்.
ரயிலவே அதிகாரிகள் மீட்புப் பணிகளை மேற்கொள்ள விபத்து நடந்த இடத்துககு விரைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள்குலாகாட்டிலிருந்து மாவட்ட தலைநகருக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ரயில்வே நிர்வாகம் விபத்து குறித்து விசாரண்ைககு ஆணையிட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!