For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலக வர்த்தகக் கழக ஒப்பந்தத்தை ஏற்கவேண்டாம் .. விவசாயிகள்

By Staff
Google Oneindia Tamil News

கேள்வி - பதில்

கே: தங்களை ஒப்படைத்தால் ராஜ்குமாரை விடுதலை செய்வதாக, வீரப்பன் ஒப்புக் கொண்டால், நாட்டுநலன் கருதி சரணடைவீர்களா?

ப: என்னைப் பார்த்தால், என்ன அவ்வளவு ஏமாந்தவனாகவா தெரிகிறது? கொஞ்சம் அயர்ந்தால், மஞசள் தடவி,மாலை போட்டு, கயிறு கட்டி, பொட்டு வைத்து, என்னை ரெடியாக வைத்து விடுவீர்கள் போலிருக்கிறதே!

கே: வாஜ்பாய்க்கும், அத்வானிக்கும் இடையே கருத்து வேற்றுமையைைத் தோற்றுவிக்க காங்கிரஸ் சதிசெய்வதாக வெங்கையா நாயுடு கூறியுள்ளாரே?

ப: சதி, கிதி என்று இவர் கோபப்படுவதைப் பார்த்தால், ஏதோ சமாச்சாரம் இருக்கும் போலிருக்கிறதே!

கே: நேருவும், காந்தியும் போன்றதுதான் வாஜ்பாயும், ஆர்.எஸ்.எஸும் என்கிறாரே அத்வானி...?

ப: அவர்கள் இருவரும் நகமும், சதையும் போல் என்றால் உடனே , நகமா சதையா? இதை எப்படி ஒப்புக் கொள்ளமுடியும்? என்று கேட்பதில் அர்த்தமில்லை. ஓர் உதாரணத்திற்காகக் கூறப்படுகிற விஷயம் இது. அத்வானிகுறிப்பிட்டது - உறவின தன்மை பற்றியே தவிர, இயக்கத்தின் தன்மை பற்றி அல்ல.

கே: 50-க்கும் அதிகமான இடங்களை சட்டசபைத் தேர்தலில் தி.மு.க.விடம் நிச்சயம் கேட்போம் என்றுபா.ஜ.க. தலைவர்கள் சொல்வது பற்றி...?

ப: நூறு கூட கேட்கலாம். ஆனால் கொடுத்ததை வாங்கிக் கொள்வார்கள்.

கே: பிரமோத் மஹாஜன் குடும்பத்தினரின் நிறுவனத்திற்கு, பிரச்சார் பாரதி அமைப்பு அதிக சலுகைகாட்டுகிறது - என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது பற்றி ... ?

ப: விசாரணைக்குரிய விஷயம்.

கே: அழகிரிக்கு தென் தமிழ்நாடு ; ஸ்டாலினுக்கு வட தமிழ்நாடு -- என்று இரு தமிழ்நாடு ஆக்கினால்,கருணாநிதியின் தலைவலி தீருமே...?

ப: மாறன் என்ன ஏமாந்த சோணகிரியா? மத்திய தமிழ்நாடும் ஒன்று வேண்டாமா?

கே: நடிகர் ராஜ்குமாரை மீட்பது தொடர்பாக, சந்தனக் கடத்தல் வீரப்பனைச் சந்தித்துப் பேச, அனைத்துக்கட்சிக் குழுவை காட்டுக்குள் அனுப்பலாம் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், முதல்வர்கருணாநிதிக்கு யோசனை கூறியுள்ளது பற்றி...?

ப: திண்டிவனம் ராமமூர்த்தியைக் காட்டுக்கு அனுப்பிவிட, இதுதான் நல்ல வழி என்று இளங்கோவன்நினைக்கிறாரோ, என்னவோ!

கே: வரும் தேர்தலில் ஒரு வேளை ஜெயலலிதா முதலமைச்சரானால், கருணாநிதியின் கதி ... ?

ப: பல வக்கீல்களுக்கு நல்ல வேட்டை. எந்த வழக்கு வருகிறதோ இல்லையோ - வருமானத்தை மீறிய சொத்துபற்றிய வழக்கு நிச்சயம் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

கே: 2001-ல் அ.தி.மு.க. ஆட்சிதான் என்பது எழுதி வைக்கப்பட்ட தீர்ப்பு என்றும், கருணாநிதிக்குஅதிகபட்ச சிறை தண்டனை வழங்குவது என்றும் - அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் அனைவரும்பேசியது பற்றி ... ?

ப: இவர்கள் கோட்டையைக் கைப்பற்ற நினைக்கிறார்களா, அல்லது ஹைகோர்ட்டைக் கைப்பற்ற நினைக்கிறார்களா- என்பது புரியவில்லை.

கே: தேர்தலில் மெனக்கெட்டு வாக்களிப்பது, பைத்தியக்காரத்தனமான செயல் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?

ப : பைத்தியக்காரத்தனம்தான் ; ஆனால் ஓட்டுப் போடாத 40 சதவிகித மக்களும் ஓட்டுப் போடத் தொடங்கினால் -இந்த பைத்தியக்காரத்தனம், நல்ல பலன் அளிக்கும்.

வீடு பற்றி எரிகிறது ; தனியாக ஒருவர் மட்டும் தண்ணீர் அள்ளிக் கொட்டினால், அது பைத்தியக்காரத்தனம்தான்:ஆனால் பெரும் கூட்டமாக மக்கள் சேர்ந்து தண்ணீரை வாரிக் கொட்டினால், அந்த பைத்தியக்காரத்தனம்நெருப்பை அணைக்க உதவுமே அது போலத்தான் இது.

கே: சன் டி.வி., ஜெயா டி.வி., போல் துக்ளக் டி.வி. ஆரம்பித்து மக்களை அரசியில் விழிப்புணர்வுஅடையச் செய்யலாமே?

ப: சொல்வதுதான் சொல்கிறீர்கள் - சி.என்.என். - ஸ்டார் போல என்று சொல்லக் கூடாதா? காண்கிற கனவை உலகஅளவில் கண்டு வைப்போமே!

கே: வெறுக்கத்தக்கதா பிராமணீயம் கண்டேன். ஆட்சி புரியவும், வியாபாரம் செய்யவும் பிராமணனுக்குஉரிமை இல்லை என்று கூறியிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் பத்திரிக்கை நடத்துகிறீர்களே! எப்படி?

ப: நானும் சரி. இன்று இருக்கிற பிராமணர்களும் சரி., பெயரளவில்தான் பிராமணர்கள். சொல்லப் போனால், இன்றுநான்கு வர்ணங்கள் இல்லை. ஒரே வர்ணம்தான் இருக்கிறது: வைச்ய வர்ணம். நாம் அனைவரும் வைச்யர்களே!

கே: வீரப்பன் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் சற்று முரண்டு பிடிப்பதாகத் தெரிகிறதே ... ! இது சரியா?

ப: வழக்குகள் வாபஸ் பெறப்படுவது என்பது, நீதிமன்றத்தின் ஒப்புதலுடன்தான் நடைபெற வேண்டும்.

நியாயம் நிலை நாட்டப்படுவது, பொது நன்மை போன்றவற்றின் அடிப்படையில்தான் நீதிமன்றம் ஒப்புதல் தரமுடியும். இப்பின்னணியில் பார்க்கும்போது சுப்ரீம் கோர்ட், தனது உரிமையை முறையாகவே பயன்படுத்துகிறதுஎன்றுதான் கூற வேண்டும். (வாதங்களுக்கு இடையில், கோர்ட் தெரிவிக்கிற கருத்துக்களில் சில ஏற்க முடியாதவைஎன்பது வேறு விஷயம்).

இது ஒரு புறமிருக்க சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் தர மறுப்பதையே கூட, க்ரநாடக, தமிழக அரசுகள் தங்களுக்குச்சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். வீரப்பனோடு நடக்கிற பேச்சு வார்த்தைகளில், முழுமையாக விட்டுக்கொடுத்து விடாமல் இருக்க, இதையே சாக்காகக் காட்ட முடியும்.

ஆனால், ஆரம்பத்திலிருந்தே சரணாகதித் தத்துவத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டதால், இரு மாநிலஅரசுகளும், இந்த வாய்ப்பைக் கூடப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

கே: வாஜ்பாய் அரசுக்கு, ஜெயலலிதா ஆதரவை விலக்கிக் கொண்ட போது, துள்ளிக் குதித்துஆர்ப்பாட்டம் செய்த பா.ஜ.க., கோவா மாநிலத்தில் அம் மாநில அரசுக்கு அளித்த ஆதரவை, விலக்கிக்கொண்டது மட்டும் முறையா?

ப: இரண்டுக்குமே அடிப்படைக் காரணம், கட்சியின் சுயநலம்தான். ஆனால், ஒரு வித்தியாசம் இருக்கத்தான்செய்கிறது. பா.ஜ.க.வுடன் ஜெயலலிதாவுக்கு தேர்தலிலேயே கூட்டணி இருந்தது: கோவாவில் பா.ஜ.க.தேர்தலுக்குப் பிறகு, ஆட்சி அமைப்பதில்தான் கூட்டணியில் இணைந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X