For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜராஜ சோழனுக்கு வயது 1015

By Staff
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்:

தஞ்சையை ஆண்ட சோழ மாமன்னன் ராஜராஜ சோழனின் 1015-வது சதய விழா(பிறந்த நாள் விழா) தஞ்சையில் 2 நாட்கள் நடைபெறுகிறது

ராஜராஜ சோழனின் 1015-வது சதய விழா ஞாயிற்றுக்கிழமையும், திங்கள் கிழமையும்நடைபெறுகிறது. இதில் தமிழக அமைச்சர்கள் கோ.சி மணி, தமிழ்குடிமகன் ஆகியோர்கலந்து கொள்கின்றனர். விழா தஞ்சை பெரிய கோவிலில் நடைபெறுகிறது.

விழா குறித்து மாவட்ட கலெக்டர் ராஜாராம் நிருபர்களிடம் பேசுகையில், முதல் நாள்நிகழ்ச்சி ஞாயிற்றுக் கிழமை நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு டி.கே.சோமசுந்தரம் குழுவினரின் நாதஸ்வர மங்கள இசையுடன் தொடங்குகிறது.

10 மணிக்கு களிமேடு அப்பர் அவையினரின் திருமறை நடைபெறும். அதைத்தொடர்ந்து உபயதுல்லா எம்.எல்.ஏ.தலைமையில் சதயவிழா நிகழ்ச்சிகள்நடைபெறுகின்றன. விழாக்குழு தலைவர் செல்வம் வரவேற்புரை நிகழ்த்துவார்.

தஞ்சையின் மூத்த இளவரசர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, தஞ்சை சரக போலீஸ்டி.ஐ.ஜி., இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

காலை 11 மணி அளவில் மாமன்னன் ராஜராஜன் என்ற தலைப்பில் கருத்தரங்கம்நடைபெறும்.இதற்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமை வகிக்கிறார்.இதன் பின்னர் நாடகமும், கவியரங்கமும் நடைபெறும்.

இந்தவிழாவில் அமைச்சர் தமிழ்குடிமகனுடன், கோ.சி. மணி மற்றும் எம்.எல்.ஏ.களும்கலந்து கொள்கிறார்கள்.

திங்கள் கிழமை மகாதேவன் குழுவினரின் மங்கல இசையும், 6.30 மணிக்கு தவத்திருஅய்யப்ப சுவாமிகள் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

7 மணிக்கு மாமன்னர் ராஜராஜன் சிலைக்கு மாலை அணிவிக்கப்படும்.

மாலை 6 மணிக்கு பேராசிரியை இளம்பிறைமணி மாறன் தலைமையில் பட்டி மன்றம்நடைபெறும்ய

இரவு 9.30 மணிக்கு அருள் மிகு பெருவுடையார், பெரியநாயகி அம்மனின் செப்புத்திருமேனிகள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்குகாட்சியளிப்பார்கள் என அவர் தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X