சோகமயமான 100 நாட்கள்
பெங்களூர்:
![]() |
காட்டில் கோபால், தப்பி வந்த நாகப்பா (இடது ஓரம்), மருமகன் கோவிந்தராஜு (பின்புறம்) ஆகியோருடன் ராஜ்குமார். |
ஜூலை 30ம் தேதி. ஈரோடு மாவட்டம் தொட்டகாஜனூர் பண்ணை இல்லத்தில் இரவுசாப்பாட்டை முடித்துக் கொண்டு ஓய்வாக, குடும்பத்துடன் டிவி பார்த்துக்கொண்டிருந்த நடிகர் ராஜ்குமார் துப்பாக்கி முனையில், வீரப்பன் கும்பலால் கடத்திச்செல்லப்பட்டார்.
தனது கோரிக்கைகள் நிறைவேறினால் மட்டுமே ராஜ்குமார் விடுவிக்கப்படுவார் என்றுகடத்திச் செல்வதற்கு முன் ராஜ்குமார் மனைவி பர்வதம்மாவிடம் கேசட் ஒன்றைக்கொடுத்து விட்டுச் சென்றான்.
அதற்குப் பிறகு நடந்தவை அனைவருக்கும் தெரியும். ராஜ்குமாரை மீட்க 5 முறைகாட்டுக்குப் படையெடுத்தார் நக்கீரன் கோபால். ஒவ்வொரு முறையும் ஒரு குழப்பம்ஏற்பட்டது. ஒன்று கோரிக்கைகள் புதிதாக பிறக்கும், அல்லது விடுதலை தொடர்பாகவேறு ஏதாவது சிக்கல்கள் ஏற்படும்.
4-வது முறை கோபால் காட்டுக்குச் சென்றபோது, ராஜ்குமாருடன் சேர்த்துக்கடத்தப்பட்டிருந்த உதவி டைரக்டர் நாகப்பா தப்பி வந்தார். ராஜ்குமார் விடுதலைசிக்கலானது.
இந்த நிலையில், கடைசி முயற்சியாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், புதுவை சுகுமாறன், பேராசிரியர் கல்யாணி ஆகியோர் அடங்கிய புதியகுழுவினர், கோபாலுடன் காட்டுக்குச் சென்றனர். இந்த முறை அவர்களால் ராஜ்குமார்மருமகன் கோவிந்தராஜுவை மட்டுமே மீட்டு வர முடிந்தது.
ராஜ்குமார் விடுதலை தொடர்பாக தற்போது முட்டுக்கட்டையாக இருப்பது 5 தமிழ்த்தீவிரவாதிகள் விடுதலை மற்றும் 51 தமிழ்த் தடா கைதிகள் விடுதலை. இவை இரண்டும்தற்போது சுப்ரீம் கோர்ட்டின் கையில் உள்ளன.
51 தமிழ்த் தடா கைதிகளை விடுவிப்பதை எதிர்த்து வீரப்பனால் கொல்லப்பட்டகர்நாடக எஸ்.பி. ஷகீல் அகமதுவின் தந்தை அப்துல் கரீம் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்தவழக்கில் விசாரணை முடிந்து விட்டது. தமிழக, கர்நாடக மாநில அரசுகளுக்கு சுப்ரீம்கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தற்போது தீர்ப்பு வெளியாகவுள்ளது.தீர்ப்பை பொறுத்தே ராஜ்குமார் விடுதலை இருக்கிறது.
ராஜ்குமாரின் பல படங்கள் 100 நாட்களைக் கடந்து ஓடியிருப்பது போல அவரதுகடத்தல் நாடகமும் 100 நாட்களைத் தொட்டுள்ளது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!