For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேசிய அளவில் 3 வது அணி தேவை...கவுடா

By Staff
Google Oneindia Tamil News

தர்மபுரி :

உறுதியான கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட மூன்றாவது அணி இந்திய அளவில் உருவாக்கப்படும்என தர்மபுரியில் ஜனதா தளத் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா கூறினார்.

தர்மபுரியில் முன்னாள் பிரதமர் தேவகவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தமிழகத்தில் தேயிலை விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மற்ற மாநிலங்களில் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் விவசாயிகள் பாதிக்காத வண்ணம் போராட்டம் நடத்தி சலுகை பெற்றுக்கொடுத்துள்ளனர்.

தமிழக தேயிலை விவசாயிகள் பிரச்னையில் அரசு உறுதியான நடவடிக்கை எதிலும் ஈடுபடவில்லை. தமிழகமுதல்வர் மத்திய அரசில் இடம் பெற்றிருந்தும் இந்த விவசாயிகளுக்கு எவ்வித முழுமையான பயனையும் பெற்றுத்தர இயலவில்லை.

எனவே, வாஜ்பாய் அரசுக்கு நெருக்கடி கொடுத்தாவது விவசாயிகளுக்கு நிர்ணயவிலை பெற்றுத் தர வேண்டும்.

அவ்வாறு செய்யத் தவறினால் தமிழகத்தில் பெரும் போராட்டம் வெடிக்கும். இதன் முதல் கட்டமாக சென்னையில்வரும் 28ம் தேதி போராட்டம் நடத்தவுள்ளோம்.

அகில இந்திய அளவில் உறுதியான கொள்கைகளை உடைய கட்சிகளை ஒருங்கிணைந்து ஒரு மூன்றாவதுகூட்டணியை உருவாக்குவோம்.

இந்த அணியில் முன்னாள் பிரதமர்கள் சந்திரசேகர், வி.பி.சிங், குஜ்ரால் மற்றும் முன்னணித் தலைவர்கள் இடம்பெருகின்றனர். இதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.

மூன்று மாதங்களாக எங்களது நால்வர் அணி மத்திய அரசின் செயல்பாடுகளை விளக்கி அதன் தவறானகொள்கைகளைப் பொதுமக்களுக்கு விளக்கி வருகிறது.

ஒவ்வொரு மாநிலம் வாரியாக நாங்கள் சுற்றுப் பயணம் செய்து வருகிறோம். தமிழகத்தின் தலைநகரானசென்னையில் வரும் 28 ம் தேதி மத்திய அரசின் போக்கைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.

தேசிய ஒருமைப்பாட்டில் வாஜ்பாய் அரசு இரட்டை வேடம் போடுகிறது. பொக்ரான் குண்டு வெடிப்பாலும், கார்கில்போராலும் இந்தியாவிற்கு இடம் கிடைத்து விடவில்லை.

இந்தியாவில் பெரும் பொருளாதாரச் சீரழிவில் சிக்கித் திணறி வருகிறது. ஒரு ஆரோக்கியமான, அதேசமயம்பலமிக்க நாடாக இந்தியாவை உருவாக்குவதே எங்கள் நால்வர் அணியின் குறிக்கோளாகும்.

பா.ஜ., தொடர்ந்து ஆட்சியில் நீடிக்குமானால், கடவுளாலும் இந்த நாட்டைக் காப்பாற்ற இயலாது என்றார்.

மாநிலத் தலைவர் வடிவேலு, கேரள முன்னாள் அமைச்சர் நீலலோகிதாசன் ஆகியோர் பேட்டியின் போதுஉடனிருந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X