For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மழை வேண்டி கழுதைக்குத் திருமணம்

By Staff
Google Oneindia Tamil News

கேள்வி - பதில்

கே: தொலைக்காட்சி மூலமாகவும், பத்திரிக்கை மூலமாகவும் பல பிரம்மாண்டமான பரிசுகளை தருவது -ஆரோக்கியமான விஷயம்தானா?

ப: கேவலமான விஷயம்! எனக்கு இந்தப் பரிசுகள் கிடைக்க வாய்ப்பே இல்லையே! நிறுத்தி விட வேண்டும். யாம்பெற்ற ஏமாற்றம்,பெறுக இவ்வையகம்!

கே: டி.டி.ஹெச். ஒளிபரப்புக்கு பா.ஜ.க. அரசு அனுமதி அளித்திருப்பது,கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின்பிழைப்பில் மண்ணை அள்ளிப் போட்டது போல் ஆகிவிடாதா?

ப: அந்த அளவுக்கு விரிவாக, டி.டி.ஹெச். பாயும் என்று நான் நினைக்கவில்லை. அமெரிக்காவில் கூட, இதுஇன்னமும் அந்த அளவுக்கு வியாபித்து விடவில்லை.

ஆகையால் இங்குள்ள கேபிள் ஆபரேட்டர்கள் இதுபற்றி கவலைப்படவில்லை. அவர்கள் கவலையெல்லாம்சுமங்கலியின் ஏகாதிபத்தியம் பற்றித்தான்.

கே: எனது பணிக் காலத்திலேயே நடிகர் ராஜ்குமாரை மீட்க முடியாதது மிகவும் வருத்தத்தைத் தருகிறது- என்று ஒய்வு பெற்ற தமிழக டி.ஜி.பி. ஷர்மா கூறியிருப்பது பற்றி ...?

ப: இது பரவாயில்லை. அடுத்த டி.ஜி.பி.யும் ஓய்வு பெறுகிற போது, இதே மாதிரி கூற நேர்ந்தால்தான், விஷயம் ஒருமாதிரியாகப் போய் விடும்.

கே; முதலில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையைப் பிடிப்போம். அதன் பிறகு டெல்லி செங்கோட்டையைப்பிடிப்போம். இந்தியாவை ஆளும் கட்சி, அ.தி.மு.க. என்று நிரூபித்துக் காட்டுவோம் - என்றுஜெயலலிதா பேசியிருக்கிறாரே? இது பற்றி தங்கள் கருத்து?

ப: மனக்கோட்டைக்கு இருக்கும் அடிப்படை உரிமையை வைத்துக் கொண்டு, இந்த கோட்டைகளையெல்லாம்பிடித்து விட முடியுமா என்ன?

கே: தி.மு.க., அ.தி.மு.க., ஆகியவற்றின் செயல்பாடுகளால் த.மா.கா. வெறுப்புற்று, மூப்பனார்தலைமையில் 3-வது அணி அமையும் வாய்ப்பு உள்ளதா? ஒரு வேளை அப்படி அமைந்தால்...?

ப: மூன்றாவது அணிக்கு வாய்ப்பு இருக்கிறதா என்பது பற்றி நிச்சயமாக எதுவும் தெரியவில்லை. ஆனால் அப்படிஓர் அணி தோன்றினால், அது, தன் வெற்றிக்கு உதவுவதை விட, முதல் இரண்டு அணிகளில் ஒன்றின் தோல்விக்கேபயன்படும் - என்பது நிச்சயமாகத் தெரிகிறது. (அடுத்த கேள்வி - பதிலையும், இத்துடன் சேர்த்துப் படிக்கவும்)

கே: உயர்நீதி மன்றத் தீர்ப்பு அ.தி.மு.க.வுக்கு (ஜெயலலிதாவுக்கு) பாதகமாக இருந்தால், தனிக்கட்சிஆட்சி என்ற ஜெயலலிதாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இருக்குமா?

ப: இருக்கலாம். நீதிமன்றத் தீர்ப்பு, அவருடைய அணுகுமுறைகளை மாற்றக் கூடிய சூழ்நிலைதான் இன்றுநிலவுகிறது.மக்களின் ஆதரவு நிலை கூட நீதிமன்ற அணுகு முறையினால் மாறக் கூடிய வாய்ப்பும் உண்டு.

கே: கோவையில் சமீபத்தில் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமிக்கும், எம்.எல்.ஏ. , சி.டிதண்டபாணிக்கும் நடந்த அடிதடி மற்றும் செருப்பு வீச்சு பற்றி தங்கள் கருத்து என்ன?

ப: சாதாரணமாக, அரசியல்வாதிகள் எதிர்க் கட்சிகளுக்குத்தான் இந்த மாதிரி மரியாதையைச் செய்வார்கள். இந்தஇருவரும், தன் கட்சிக்காரக்களுக்கும், எதிர்க் கட்சிக்கார்களுக்கும் வித்தியாசம் பார்க்காத பரந்த மனம்கொண்டவர்கள் போலிருக்கிறது. இந்த தாராள மனத்தைப் பாராட்டுவதை விட்டு, அது பற்றி கேள்விஎழுப்புகிறீர்களே? இது நியாயமா?

கே: இந்தியாவின் பிரதிநிதியாக ஐ.நா. சபைக்குச் சென்று திரும்பிய வைகோ, லண்டனில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கத்தைச் சந்தித்துள்ளதாகச் செய்திவெளியாகியுள்ளது பற்றி...?

ப: அரசினால் தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சார்ந்தவரை, அரசு செலவிலேயே போய் பார்த்து வந்திருக்கிறார்.மாநில அரசு, புலி நண்பர்களைச் சந்திக்க காட்டுக்கு சிலரை அனுப்புகிறது. மத்திய அரசு, தன் செலவில்அயல்நாட்டில் புலி சந்திப்பு நடக்க அனுமதிக்கிறது. நமக்கு குறையே இல்லை.

கே: எந்த ஒதுக்கீடும் இல்லாமல் பிரிட்டனில் 44 சதவிகிதமும், ஸ்வீடனில் 54 சதவிகிதமும் பெண்எம்.பி.க்கள் இருக்கிறார்கள் - என்கிறாரே சபாநாயகர் பாலயோகி! தங்கள் கருத்து?

ப: இந்த புள்ளி விவரம் தவறானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். பெண்கள் என்ற பேச்சு ஆரம்பித்தாலேமிகைப்படுத்துவது என்பது தவிர்க்க முடியாததாகி விடும் போலிருக்கிறது.

கே: ஜெயலலிதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்படும் கண்டனக் கூட்டங்களில், அரசியல்நாகரீகத்தை மறந்து விட்டு பேசக்கூடாது என்று தன் கட்சித் தொண்டர்களை ,கருணாநிதி கேட்டுக்கொண்டிருப்பது பற்றி...?

ப: நல்ல அறிவுரைதான். வரவேற்கத் தக்கதுதான். ஆனால் அரசியல் நாகரிகம் என்று இவர்கள் கருதுவது எதை?அங்குதான் இடிக்கிறது.

கே: சென்னை நகரில் கட்டப்பட்டுள்ள பாலங்களைப் பற்றி உங்கள் கருத்து?

ப: சில பாலங்கள், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவுகின்றன. வேறு சில, ஏன் கட்டப்பட்டன என்பதேபுரியவில்லை.

கே: பதவி சுகமா? சுமையா?

ப: உங்கள் தலையில் ஒரு பண மூட்டையை வைத்து, எடுத்துக் கொண்டு போகச் சொன்னால் - அது சுமையா?சுகமா? சுமைதான் - சுகமான சுமை.

கே: இலங்கையில் சரணடைந்த 25 விடுதலைப் புலிகளை, சிங்களர்கள் கொடூரமாக படுகொலை செய்தசெயலைப் பற்றி?

ப: தங்கள் செயல்பாடுகளை நியாயப்படுத்த, விடுதலைப் புலிகள் சிரமப்படுத்தத் தேவையில்லை. இந்த மாதிரியானசிங்கள அராஜகங்கள் புலிகளின் மிக மோசமான வன்முறையைக் கூட நியாயப்படுத்தி விடும்.

இப்படிப்பட்ட சிங்கள மனப்பான்மை இருக்கிற வரையில், இலங்கை அமைதியைக் காண முடியாது. இந்தகொடூரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை பெறச் செய்வது, சந்திரிகாஅரசின் கடமை.

கே: மூன்றாவது அணி அமைப்பதே தனது முக்கியமான பணி என்று ஜோதி பாசு கூறியுள்ளது பற்றி ...?

ப: ஓய்வு பெற்று விட்டார். இனிமேல் பொழுது போக வேண்டாமா? அதற்குத்தான் இப்படி ஒரு விளையாட்டு.அதில் தவறு ஒன்றுமில்லை.

கே: கிளிண்டன் கையில் இந்தியாவை ஒப்படைத்து விடலாம் - என்று லாலு பிரசாத் யாதவ்கூறியுள்ளாரே?

ப: சே! ஒரு பீஹாரை சரி செய்ய முடியவில்லை என்பதற்காக, இவ்வளவு விபரீதமான நடவடிக்கை தேவையில்லை.

கே: கோட்டை ஒன்று மிச்சம் உளதே - என்று கருணாநிதியும், குள்ள நரி குணமுண்டு - என்றுஜெயலலிதாவும் ஒருவரை ஒருவர் சாடிக் கொண்ட கவிதைகளைப் பற்றி ...?

ப: வசன கவிதை என்று கேள்விப் பட்டிருக்கிறேன். இந்த இரண்டு கவிதைகளுமே - வசை கவிதைகள். இவற்றில்முதல்வரின் வசைக் கவிதையைப் பிரசுரித்த தினப் பத்திரிக்கைகள் ஜெயலலிதாவின் வசைக் கவிதையைப்பிரசுரிக்கவில்லை ; தினமணி மட்டும் பிரசுரித்தது. என்ன தைரியமோ தெரியவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X