For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்று பிறக்கிறது ஜார்கண்ட்

By Staff
Google Oneindia Tamil News

ஜாம்ஷெட்பூர்:

இந்தியாவின் 28-வது மாநிலமான ஜார்கண்ட் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு அமலுக்குவருகிறது.

பீகார் மாநிலத்தை சரி பாதியாகப் பிரித்து ஜார்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் 28-வது மாநிலமாகும் இது. இதற்கு முன்பு சமீபத்தில், சட்டீஸ்கர்,உத்தாரஞ்சல் ஆகிய புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.

தாது வளம் நிறைந்த ஜார்கண்ட் மாநிலம் 80,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவுகொண்டதாகும். பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சியமைக்கும் என்று பரவலமாகஎதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியும் களத்தில்இறங்கியுள்ளது.

பா.ஜ.க. சட்டசபைக் கட்சித் தலைவராக முன்னாள் மத்தியஅமைச்சர் மாரண்டி தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.அவரே முதல்வராகவும் பதவியேற்பார் என்றும் தெரிகிறது.நள்ளிரவில் முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் பல தொழிற்சாலைகள் நிறைந்துள்ளன. பீகார் இதுவரைஅனுபவித்து வந்த தொழில் வளம் இனிமேல் ஜார்கண்ட்டுக்குக் கிடைக்கவுள்ளது.

ஜார்கண்ட் பகுதியில் நாட்டின் மூன்றில் ஒரு பங்கு தாதுக்கள் இருப்பதாக ஆய்வுகளில்தெரிய வந்துள்ளது. 37.5 சதவீதம் நிலக்கரி, 40 சதவீதம் தாமிரம், 22 சதவீதம் இரும்புதாது, 90 சதவீதம் பாக்ஸைட்,மைகா ஆகியவை ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ளன.

இவை தவிர டாலமைட், குரோமைட், கிராபைட், மாங்கனீஸ், செர்மிக் ஆகியதாதுக்களும் அதிக அளவில் இப்பகுதியில் உள்ளன.

யுரேனியமும் அதிக அளவில் இந்தப் பகுதியில் இருக்கிறது. நாட்டிலுள்ள அணுஉலைகளுக்குத் தேவையான யுரேனியம் இந்தப் பகுதியிலிருந்துதான் கணிசமானஅளவு சென்று கொண்டுள்ளது.

தாதுக்கள் தவிர, நீர் மின்சாரம், அனல் மின்சாரமும் அதிக அளவில் இங்கு உற்பத்திசெய்யப்படுகிறது. இவை இரண்டின் மூலம் மட்டும் 1220 மெகாவாட் மின்சாரம்உற்பத்தி செய்யப்படுகிறது.

பருத்தி, பட்டு, கைத்தறி, விசைத்தறி நிறுவனங்களும் ஏராளமான அளவில் உள்ளன.சிங்க்பும் பகுதியில் மட்டும் 48 சிறு தொழில் நிறுவனங்கள் உள்ளன.

இவற்றிற்கெல்லாம் மணி மகுடம் போல, உலகப் புகழ் வாய்ந்த இரண்டு இரும்பு எஃகுநிறுவனங்கள் ஜார்கண்ட் பகுதியில் உள்ளன. ஆசியாவிலேயே மிகப் பெரிய டாடாஸ்டீல், இங்குதான் உள்ளது. 1907-ம் ஆண்டு நிறுவப்பட்டது இது. ஜாம்ஷெட்பூர்நகரில் உள்ளது.

மற்றொரு நிறுவனம் பொக்காரோ ஸ்டீல் நிறுவனம். இது 1966-ம் ஆண்டுஉருவாக்கப்பட்டது.

இத்தனை வளங்கள் நிறைந்துள்ள ஜார்கண்ட், தாய் மாநிலமான பீகாரை விட நல்லநிலைக்கு வருமா என்பதை எதிர்காலமே சொல்ல வேண்டும்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X