வீரப்பனிடமிருந்து ராஜ்குமாரை மீட்ட பெண் டாக்டர்
பெங்களூர்:
வீரப்பனிடமிருந்து ராஜ்குமாரை மீட்பதில் பெங்களூரைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். இந்தத்தகவலை ராஜ்குமாரை நிருபர்களிடம் தெரிவித்தார்.
2வது முறையாக காட்டுக்குச் சென்ற பழ. நெடுமாறன் தன்னுடன் பெங்களூரைச் சேர்ந்த தமிழ் பெண் டாக்டர் பானு, கர்நாடகமுன்னாள் டி.ஐ.ஜி. ராமலிங்கத்தின் மகன் ராம் குமார், கர்நாடக லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவரும் பெங்களூரைச் சேர்ந்தமுக்கிய தமிழ் பிரமுகருமான ப. சண்முகசுந்தரம், கொளத்தூர் மணி ஆகியோரையும் உடன் அழைத்துச் சென்றார்.
இவர்கள் தவிர நெடுமாறனின் தூதுக்குழுவினரான புதுவை சுகுமாறன், பேராசிரியர் கல்யாணி ஆகியோரும் உடன் சென்றனர்.
இதில் டாக்டர் பானு, கொளத்தூர் மணி, ராம்குமார் மூவரும் தொடர்ந்து வீரப்பனிடம் பேசி அவனை மசிய வைத்ததால் தான்ராஜ்குமார் விடுவிக்கப்பட்டுள்ளார். ஈரோட்டிலிருந்து வியாழக்கிழமை பெங்களூர் வந்த ராஜ்குமாருக்கு தலைமைச் செயலகமானவிதான செளதாவில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
ராஜ்குமார் பேட்டி:
பின்னர் முதல்வர் கிருஷ்ணாவுடன் அவர் நிருபர்களைச் சந்தித்தார். ராஜ்குமார் கூறுகையில், என்னை மீட்பதில் டாக்டர் பானுபெரும் பங்கு வகித்தார். இதற்காக நெடுமாறனை நான் குறைத்து மதிப்பிடுவதாக யாரும் நினைத்துவிடக் கூடாது.
டாக்டர் பானு வீரப்பனை மிரட்டியே பணிய வைத்தார். எனது உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாக வீரப்பனிடம் கூறியபானு, இன்னும் என்னை காட்டில் வைத்திருப்பது நல்லதல்ல என்று வீரப்பனிடம் வாதாடினார். ஆண்கள் சாதிக்க முடியாததைபானு சாதித்தார். இன்று நான் உங்கள் முன் நிற்க அவர் தான் காரணம்.
வீரப்பனிடமிருந்து மீண்டுவிட்டேன் என்று இன்னும் கூட என்னால் நம்ப முடியவில்லை.
நடிக்கச் சொன்னார்கள்:
மருந்து மாத்திரைகளோடு நெடுமாறனுடன் வந்த பானு என்னை சோதனை செய்தார். பின்னர் எனக்கு நெஞ்சு வலி இருப்பதாகபொய் சொல்லச் சொன்னார். எனக்கு மயக்கம் வருவதாகவும் கூறச் சொன்னார். நான் அவர் சொல்லிக் கொடுத்ததை வீரப்பனிடம்சொன்னேன். அப்போது வீரப்பனிடம் பேசிய பானு இனியும் இவரை காட்டில் வைத்திருந்தால் அவரது உடல் நலத்துக்கு ஆபத்துஎன்று வாதாடினார்.
ராஜ்குமாரை நீங்கள் விடுதலை செய்யாவிட்டால் கூட பரவாயில்லை, அவரை கூட்டிக் கொணடு நாங்கள் புறப்படுவோம் என்றுமூன்று பேரும் வீரப்பனிடம் காட்டமாகக் கூறினர்.
முதலில் நான் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தபோது என்னை வீரப்பனின் கூட்டாளி ஒருவர் எழுப்பினார். பெங்களூரில் இருந்துஎன்னைப் பார்க்க 3 (பானு, ராம்குமார், கொளத்தூர் மணி) பேர் வந்திருப்பதாகக் கூறினார். அவர்களிடம் கன்னடத்திலேயேபேசுங்கள் என்றார். நான் இந்த 3 பேரிடமும் தமிழில் பேசினேன்.
ஒரு வழியாய் இந்த மூன்று பேரும் தொடர்ந்து வீரப்பனிடம் பேசி என்னை விடுவிக்க வைத்தனர். செவ்வாய்க்கிழமை நள்ளிரவில்என்னை விடுவிப்பதாக வீரப்பன் அறிவித்தவுடனேயே அங்கு ஒரே மகிழ்ச்சி வெள்ளம் புரண்டது. அனைவரும் மிகவும் மகிழ்ந்துபோனார்கள்.
புதிய வேஷ்டி சட்டை:
எனக்கு வீரப்பன் பொன்னாடை போர்த்தினான். புதிய வேஷ்டியும், சட்டையும் கூடக் கொடுத்தான்.
அவனுக்கு நன்றி சொல்லிவிட்டுப் புறப்பட்டோம். 14ம் தேதி மாலை காட்டின் எல்லையை அடைந்தோம். அங்கிருந்துஈரோட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.
என்னை விடுவிக்க தமிழக, கர்நாடக அரசுகள் எடுத்த முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வீரப்பனின்கோரிக்கைகளுக்கு இரு மாநில அரசுகளும் அளித்த பதில்களை ரேடியோவில் கேட்டேன். 12 நாட்களில் விட்டுவிடுவான் என்றுதான் நினைத்தேன். ஆனால், தடா கைதிகள் பிரச்சனையால் தான் விவகாரம் நீடித்துவிட்டது.
ஒவ்வொரு முறையும் நக்கீரன் கோபால் வந்தபோதெல்லாம் நாம் விடுதலையாகிவிடுவோம் என நம்பினேன். ஆனால்,கோபாலால் என்னை விடுவிக்க இயலவில்லை. இதனால் வெறுத்துப் போனேன்.
விளக்க முடியாத வேதனை அது:
அது அடர்ந்த காட்டுப் பகுதி. அங்கு வீரப்பன் கூட்டாளிகள் தவிர யாரையும் பார்க்க முடியவில்லை. நாங்கள் தான் ஒருவரைஒருவர் பார்த்துக் கொள்ள வேண்டிய நிலை. பார்ப்பதற்கு வேறு முகங்கள் கூட இல்லை. ஒவ்வொரு நாளையும் எப்படித்தான்கடத்தப் போகிறோமோ என்ற வேதனையுடன் தான் கடத்தினோம். அது மிகக் கஷ்டமான விஷயமாக இருந்தது. அந்த சிரமத்தைவிளக்கக் கூட முடியாது. அவ்வளவு வேதனையானது.
எங்கு பார்த்தாலும் மரங்கள் தான். கிராமமோ, மனிதர்களோ ஒன்றும் இல்லை. எப்போதாவது யானைகள் அந்தப் பக்கம் வந்துசெல்லும். அவ்வளவு தான்.
ஒரு இடத்தில் 2 நாட்களுக்கு மேல் வீரப்பன் தங்க விடவில்லை. தொடர்ந்து இடம் மாற்றிக் கொண்டே இருந்தான். இந்த 108நாட்களில் குறைந்தபட்சம் 50, 60 முறையாவது இடம் மாறியிருப்போம் என்றார் ராஜ்குமார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications