For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முள் மீது விழுந்த துணியை மீட்பது போல் ராஜ்குமாரை மீட்டோம்: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கும், தமிழகத்தில் வாழும் கன்னட மக்களுக்கும்எந்தவித தொந்தரவும் ஏற்பட்டு விடாத வண்ணம், மிகவும் கவனமாக ராஜ்குமார்கடத்தல் விவகாரத்தை கையாண்டோம் என்று தமிழக முதல்வர் கருணாநிதிகூறியுள்ளார்.

வீரப்பன் பிடியிலிருந்து கன்னட நடிகர் ராஜ்குமார் மீட்கப்பட்டுள்ளார். ராஜ்குமாரைமீட்க என்ன மாதிரியான சிரமங்களைத் தான் கவனத்தில் கொள்ள வேண்டியிருந்ததுஎன்பதை தமிழக முதல்வர் கருணாநிதி அறிக்கையொன்றில் விளக்கியுள்ளார்.

கருணாநிதி அறிக்கை விவரம்:

நடிகர் ராஜ்குமாரை மீட்பதில் பல சிரமங்கள் இருந்தன. தமிழர்கள், கன்னடர்கள்நலனைக் கருத்தில் கொண்டு, மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட்டோம். கடந்தமூன்று மாதகாலமாக ராஜ்குமார் காட்டில் இருந்த நேரத்தில், இரு மாநிலங்களிலும்எந்தவிதமான அசம்பாவித சம்பவமும் நடைபெறதாதது நிம்மதியைத் தருகிறது.

சட்டம்,ஒழுங்கு பிரச்சினையைக் கருத்தில் கொண்டு இரு மாநில அரசுகளும் மிகவும்கவனத்துடனும், புதிய அணுகுமுறைகளையும் கையாள வேண்டியிருந்தது.

நாங்கள் எடுத்த புத்திசாலித்தனமான நடவடிக்கைக்கு பலன் கிடைத்துள்ளது. மத்தியஅரசுக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எங்களுக்குமிகவும் உறுதுணையாக இருந்தது மத்திய அரசு.

நானும், கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவும் ராஜ்குமாரை மீட்க எடுத்த நடவடிக்கைகளைசிலர் கோழைத்தனம் என்றும் கேலிக்கூத்தாக உள்ளது என்றும் விமர்சித்தார்கள்.ஆனால் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், ராஜ்குமார் மீட்புதான்நமக்கு முக்கியம் என்ற நிலையை நானும், கர்நாடக முதல்வரும் எடுத்தோம். எதைப்பற்றியும் கவலைப்படாது, ராஜ்குமாரை பத்திரமாக மீட்டு வருவது குறித்து தொடர்ந்துநடவடிக்கை எடுத்து வந்தோம்.

முள்ளின் மீது விழுந்த துணியை, கிழிந்து விடாமல் எடுப்பது போல, ராஜ்குமாரைமீட்கும் முயற்சியில் நாங்கள் இறங்கினோம்.

ராஜ்குமார் மீட்பு முயற்சியில், அயராது பாடுபட்ட நக்கீரன் ஆசிரியர் கோபால் மற்றம்அவரது குழுவினர், பழ.நெடுமாறன் மற்றும் அவரது குழுவினருக்கு இரு மாநிலஅரசுகளும் நன்றிக் கடன்பட்டுள்ளன.

ஆரம்பம் முதலே, கோபாலும், அவரது குழுவினரும் மிகுந்த ஆர்வம் காட்டினர்.ராஜ்குமார் மீட்பு விஷயத்தில் பல்வேறு சிரமங்களை அவர்கள் சந்திக்க நேர்ந்தது என்றுகூறியுள்ளார் கருணாநிதி.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X