For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புலிகளிடமிருந்து நகரை மீட்டது இலங்கை ராணுவம்

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கையில் யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் மீது, இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்திய தாக்குதலில் முக்கியமான 2 நகரங்கள் மீட்கப்பட்டதாகராணுவம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே சமரசம் செய்வதற்காக நார்வே தூதுக்குழு கடந்த மாதம் கொழும்பு வந்தது. பின்னர் தூதுக்குழுதலைவர் எரிக்சோல்ஹெம் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்து சமரச திட்டம் குறித்து அறிவித்தார்கள்.

பேச்சுவார்த்தையின் போது பிரபாகரன் இலங்கை ராணுவ தாக்குதலை நிறுத்தினால்தான் பேச்சு நடத்த முடியும் என்றார். இதையடுத்து நார்வே தூதுக்குழுஇலங்கை அதிபர் சந்திரிகாவை சந்தித்து, பிரபாகரனுடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து எடுத்துக் கூறியது.

இதையடுத்து, இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில், புலிகள் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அரசு தயாராக இருக்கிறது.ஆனால் இது குறித்தான ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் என்று சந்திரிகா அறிவித்தார்.

நார்வே தூதுக்குழுவின் சமரச முயற்சிக்குப் பிறகு இலங்கையில் கடந்த 3 வாரமாக ராணுவ தாக்குதல் ஓரளவு குறைந்து இருந்தது. இதற்கிடையேஞாயிற்றுக்கிழமை வடக்கு யாழ்ப்பாணத்தில் இலங்கை ராணுவம், விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தியது. இதுகுறித்து பிரிகேடியர் சனத் கருணாரத்னேகூறியதாவது:

வடக்கு யாழ்ப்பாண தீபகற்பத்தை இணைக்கும் 2 நகரங்களை விடுதலைப்புலிகளிடம் இருந்து மீட்க இலங்கை ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது. இதில்,சாவகச்சேரி அருகேயுள்ள நுணவில் பகுதியை ராணுவம் கைப்பற்றியுள்ளது. சாவகச்சேரி நகர், கடந்த அக்டோபர் மாதம் நடந்த தேர்தலுக்கு முன்புவிடுதலைப்புலிகளிடமிருந்து மீட்கப்பட்டது என்றார் கருணாரத்னே.

இதுகுறித்து இலங்கை ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த மோதலில், இருதரப்பிலும் சேர்த்து மொத்தம் 27 பேர்இறந்ததாகவும், அதில் 14 பேர் புலிகள், 13 பேர் ராணுவ வீரர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவீரர் வாரம்:

இதற்கிடையே இலங்கையில், செவ்வாய்க்கிழமை முதல் விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் மாவீரர் வாரம் கொண்டாட உள்ளனர்.

புலிகள் இயக்கத்துக்காகப் போரிட்டு இறந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையிலும், பிரபாகரனின் 46 வது பிறந்தநாளைக் கொண்டாடும்வகையிலும் இந்த விழாவுக்கு புலிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

மாவீரர் வார விழாவின் போது அசம்பாவிதச் சம்பவங்கள் எதுவும் நடக்காதவாறும், தற்கொலைப் புலிகள், முக்கியத் தலைவர்கள் மீது தாக்குதல்நடத்திவிடாதபடியும், இலங்கை அரசு பாதுகாப்பு நடவடிக்கையை பலப்படுத்தியுள்ளது. தலைநகர் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் முக்கியப் பகுதிகளில் பாதுகாப்புஅதிகரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகரில் மட்டும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தற்கொலை படையைச் சேர்ந்த 46 பேர் ஊடுருவியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.இதையொட்டி அங்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X