For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீரப்பனை பிடிக்க நாகப்பாவை நாடுகிறது அதிரடிப்படை

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

வீரப்பன் பிடியிலிரூந்து தப்பி வந்த நாகப்பா உ.தவியுடன் வீரப்பனை பிடிக்கஅதிரடிப்படையினர் முயற்சி செய்து மாதிரி திட்டம் தயாரித்துள்ளனர்.

கன்னட நடிகர் ராஜ்குமார், அவரது மருமகன் கோவிந்தராஜு, உதவி டைரக்டர்நாகப்பா மற்றும் நாகேஷ் ஆகியோரை வீரப்பன் கடத்திச் சென்றான்.

இவர்களில் உதவி டைரக்டர் நாகப்பா 61 நாட்கள் வீரப்பன் பிடியில் இருந்த பின்புதப்பி வந்தார். காட்டு பாதையில் 20 மணி நேரம் நடந்து வநத்தாக கூறியிருந்தார்.

வீரப்பனை பிடிக்க போலீசாருக்கு வழிகாட்டியாக நாகப்பாவை உபயோகப்படுத்திக்கொள்ள அதிரடிப்படை முடிவெடுத்திருப்பதாக தெரியவந்துள்ளது.

நாகப்பா காட்டில் இருந்த போது வீரப்பனுடன் யார் யார் இருந்தனர். என்றவிவரங்களை போலீசார் கேட்டு அறிந்து வைத்துள்ளனர். கர்நாடக அதிரடிப் படைக்குசங்கிலியானா தலைமை தாங்கி உள்ள பின் அதிரடிப்படையின் உ.ற்சாகம் அதிகமாகிஉள்ளது.

காவல் துறை அதிகாரிகள் கெம்பையா, சங்கர் பிதரியும் நாகப்பாவிடம் விசாரணைநடத்தியுள்ளனர்.

நாகப்பாவுக்கு வீரப்பனுக்கு உதவி செய்தவர்கள், வீரப்பன் கூட்டாளிகள், தமிழ்தீவிரவாதிகளின் முகங்கள் நன்கு தெரிந்து இருக்கும். அதனால் அவர் மூலம் வீரப்பன்கூட்டாளிகள் மற்றும் தமிழ்த் தீவிரவாதிகளை பிடித்து விடலாம் என காவல் துறையினர்கருதுகின்றனர்.

நாகப்பாவுக்கு வீரப்பன் மற்றும் அவனது ஆட்கள், அவன் தங்கி இருந்த குகைப் பகுதிமற்றும் கூட்டாளிகள் பற்றிய எல்லா விவரமும் தெரியும் என தெரிய வந்துள்ளது.

நாகப்பா பண்ணாரி காட்டிலிருந்து தப்பி வந்ததாகக் கூறியதால் அந்த பகுதியின் மாதிரிவரைபடம் வரையப்பட்டு தீவிர தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. அந்தப்பகுதியில் தான் வீரப்பனுக்கு அதிக ஆதரவு இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

நாகப்பனுக்கு அதிரடிப் படையினரின் உடைகள் அணிவிக்கப்பட்டு காட்டுக்குள்அழைத்துச் செல்லப்பட்டு அவர் காட்டில் தங்கி இருந்த பகுதிகளை அடையாளம்காட்டச் சொல்லுமாறு கேட்கப்படலாம் எனவும் தெரியவந்துள்ளது.

காட்டுப் பகுதியில் நன்கு இயங்கக் கூடிய போலீஸ் வாகனங்களும் பயன்படுத்தப்படஇருக்கின்றன.

மாறுவேடத்தில் அதிரடிப்படை வீரர்கள்:

இதற்கிடையே, வீரப்பன் சாமி பக்தி உள்ளவன். எந்த ஒரு காரியத்தையும் தொடங்கும்முன்னும் சாமியிடம் பூ கட்டிப் போட்டு உத்தரவு கிடைத்த பின்புதான் அந்த காரியத்தைதொடங்குவான். அவன் நினைத்ததற்கு மாறாக பூ விழுந்தால் அந்த காரியத்தை செய்யமாட்டான்.

அவனது எல்லா செயல்களுக்கும் அமாவாசையைத் தான் தேர்ந்தெடுப்பான்.ராஜ்குமாரை கடத்தியதும் அமாவாசையன்றுதான்.

சனிக்கிழமை அமாவாசை என்பதால் வீரப்பன் அவனது சொந்த ஊரானகோபிநத்தத்தில் உள்ள கோவிலுக்கோ அல்லது மலைமாதேஸ்வரன் கோவிலுக்கோவரலாம் என எண்ணி போலீசார் கிராம மக்கள் போலவும், ஐயப்ப பக்தர்கள் போலவும்மாறு வேடமணிந்து கண்காணித்து வந்தனர். ஆனால் வீரப்பன் வரவிலை,

இந்நிலையில் திருச்சியிலிருந்து ஆயுதப்படை போலீசார் 300 பேர் 5 பஸ்களில்பண்ணாரி முகாமுக்கு வந்து சேர்ந்தனர். தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தஅதிரடிப்படையினர் சனிக்கிழமையன்று முகாமுக்கு திரும்பினர். அவர்களுக்குபதிலாக வேறு சிலர் தேடுதல் வேட்டைக்கு புறப்பட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X