சோனி டிவி நிகழ்ச்சி: ரூ 75 கோடி பரிசு

Posted By:
Subscribe to Oneindia Tamil

கல்கத்தா:

பல தனியார் தொலைக் காட்சிகளிலும் ஒளிபரப்பாகி வெற்றி பெற்றுள்ள கோடீஸ்வர நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து சோனி டி.வி.யிலும் கோடீஸ்வர நிகழ்ச்சிஒன்று ஆரம்பிக்கப்பட இருக்கிறது.

ஸ்டார் டிவியில் இந்தி நடிகர் அமிதாப்பச்சன் கோன் பனேகா குரோர்பதி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதில் கேட்கப்படும் அனைத்துகேள்விகளுக்கும் பதிலளித்தால் ரூ 1கோடி பரிசாக வழங்கப்படும்.

இந்த நிகழ்ச்சி பெற்ற வெற்றியைத் தொடந்து சன் டிவியில் கோடீஸ்வரன் என்ற நிகழ்ச்சி தொடங்கி நடந்து வருகிறது. இதற்கான பரிசுத் தொகையும் ரூ 1கோடி.

ஜீ டிவியில் நடத்தப்பட்டு வரும் சவால் தஸ் குரோர் கா என்ற நிகழ்ச்சியில் ரூ 10 கோடி பரிசாக வழங்கப்படுகிறது.

இப்போது சோனி டிவி ஜீதோ சபர் பாத் கீ என்ற நிகழ்ச்சி அடுத்த ஆண்டு முதல் துவங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியின் பரிசுத் தொகை அனைத்து கோடீஸ்வரநிகழச்சிகளையும் மிஞ்சி விட்டது. இந்த நிகழ்ச்சியில் ரூ 75 கோடி பரிசாக வழங்கப்பட இருக்கிறது.

இந்த போட்டிக்கான கேள்விகளை குளோபல் நாலெட்ஜ் போர்ட்டல் நிறுவனமே தயாரித்து வருகிறது. ஸ்டார் டிவி நிகழச்சிக்கான கேள்விகளை பிரபலகுவிஸ் நிபுணர் சித்தார்த்தா பாசு தொகுத்து வருகிறார்.

அவர் பிபிசியில் நடத்தப்பட்டு வரும் மாஸ்டர் மைண்ட் நிகழ்ச்சிக்கான கேள்வி பதிலையும் தொகுத்து வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

குளோபல் நாலெட்ஜ் போர்ட்டல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டெரக் ஓ பிரையன் இந்த நிகழ்ச்சி பற்றி கூறுகையில். இந்த நிகழ்சிக்கான பரிசுத்தொகை நிகழ்ச்யை நடத்துவதன் மூலம் திரட்டப்படும்.

இதற்கு எங்கள் நிறுவனம் உதவும். ஜீதோ சபர் பாத் கீ என்றால் கூரையைப் பிய்த்துக் கொண்டு வெற்றி காண் என்பது அர்த்தமாகும்.

சன் டி.வியால் நடத்தப்படும் கோடீஸ்வரன் நிகழ்ச்சி கோன் பனோக குரோர்பதி யை மிஞ்சிவிட்டது. இதற்கு கிடைத்து வரும் வரவேற்பு பிரமிக்கும் படியாகஅமைந்துள்ளது என கூறினார்.

கேள்விகள் தயாரித்துக் கொடுக்க அவருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட இருக்கிறது என கூற மறுத்து விட்டார். அவருக்கு ரூ 60 கோடிதரப்படலாம் என கூறப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற