For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விவசாயிகளை ஏமாற்றி கிட்னி திருடும் கும்பல் கைது

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

ஆந்திராவைச் சேர்ந்த ஏழை விவசாயிகளை ஏமாற்றி அவர்களிடமிருந்து சிறுநீரகங்களைத் திருடி வந்த 2 டாக்டர் உள்ளிட்ட 9பேர் கொண்ட கும்பலை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

பணம், வேலை தருவதாகக் கூறி ஏழை விவசாயிகளை ராங்கி ரெட்டி என்பவன் டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளான். அங்குஅவர்களை பேசியே ஏமாற்றி அறுவை சிகிச்சை செய்து சிறுநீரகங்களைத் திருடிவிட்டு அதற்கு அடிமாட்டு விலை கொடுத்துவந்தான். ஆனால், இந்த சிறுநீரகங்களை லட்சணக்கான ரூபாய்க்கு விற்று வந்துள்ளான்.

இவனுக்கு டாக்டர்களான ஜீவன் குமார், அமித் குமார் ஆகியோர் உதவியுள்ளனர். டெல்லியில் வசித்து வரும் இந்த டாக்டர்கள்கிட்னி தேவைப்படுவதாதக் கூறியவுடன் ஆந்திராவிலிருந்து பல ரத்த வகையைச் சேர்ந்த ஏழைகளை ரெட்டி டெல்லிக்குஅழைத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

இப்படி அழைத்து வரப்படும் விவசாயிகளைத் தங்க வைக்க ஒரு வீட்டையும் வாடகைக்கு எடுத்துள்ளது இக் கும்பல். இந்தவிவசாயிகள் டெல்லிக்கு வந்து இறங்கியவுடன் அவர்களுக்கு முதலில் தூக்க மருந்தையும் பின்னர் ஊசிகளையும் போட்டுள்ளனர்.தூக்கத்திலேயே அவர்களுக்கு அனஸ்தீசியாவும் கொடுக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து சிறுநீரகங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

பின்னர் மீண்டும் பல நாட்கள் அவர்களை மயக்க நிலையில் வைத்து தையல் பிரித்தவுடன் தான் சுயநினைவுக்கு வரஅனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறுநீரகம் எடுக்கப்பட்ட விவரம் கூட பல விவசாயிகளுக்குத் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கிட்னி திருட்டுகள் குறித்து ஆந்திர போலீசாருக்குத் தான் முதலில் தகவல் கிடைத்தது. அவர்கள் உடனடியாக டெல்லிபோலீசாரை எச்சரித்தனர். ரெட்டியை மடக்கத் திட்டமிட்ட டெல்லி போலீஸ் இதற்கென 2 சிறப்புப் படைகளை உருவாக்கியது.

இந்தப் படையினர் நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் வைத்து ரெட்டியை மடக்கினர். அப்போது அவனுடன் ஆந்திராவைச் சேர்ந்தசில அப்பாவி விவசாயிகளும் உடன் இருந்தனர்.

இதில் டாக்டர் அமித் குமார் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர். இவருக்கு மேற்கு டெல்லி கரோல் பாக்கில் ஸ்டார் டயாக்னாஸ்டிக்அண்ட் மெடிக்கல் கேர் சென்டர் என்ற மருத்துவனை உள்ளது. இந்த மருத்துவனையில் வைத்துத் தான் கிட்னிகள் சோதனைசெய்யப்பட்டுள்ளன. இங்கு வைத்துத் தான் அவை விற்கப்பட்டும் உள்ளன.

முன்பு நேபாள தலைநகர் காத்மாண்டுவில் சிறுநீரகங்களைத் திருடி விற்று வந்த அமித் குமார் பின்னர் டெல்லிக்கு தனது டேராவைமாற்றியுள்ளான். டெல்லியில் மட்டும் 60 சிறுநீரக அறுவை சிகிச்சைகளை செய்துள்ளான்.

ஒரு கிட்னியை ரு 4 லட்சத்துக்கு விற்று வந்த இவன், சிறுநீரகத்தை விற்ற ஏழை விவசாயிகளுக்கு ரூ. 40,000 மட்டுமேகொடுத்துள்ளான்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X