For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிலிகான் வாழ்வு சுகமானதல்ல

By Staff
Google Oneindia Tamil News

சான் ஜோஸ்:

சிலிகான் வாலி இந்தியர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் மற்றும் தொழில் முனைபவர்களுக்கும் வளம் தரும் பகுதியாகஇருககலாம். ஆனால் அங்கு குடிபெயர்பவர்களுக்கும் சகமான வாழ்விடமாகாது என அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

வடக்கு கலிபோர்னியாவில் இருக்கும் மனித வள மேம்பாட்டுத்துறை மற்றும் குடிபெயர்ந்தவர்களுக்கான அலுவலக்திற்குகிடைத்திருக்கும் தகவலின் படி சான்டா க்ளாராவில் இருக்கும் சிலிகான் வாலியில் மனதிற்கு மகிழ்ச்சி தராத பலநிலைகளும்உள்ளன என தெரிவிக்கிறது.

இங்கு பிரிட்ஜிங் பார்டர்ஸ் இன் சிலிகன் வாலி என்ற அறிக்கை குடிபெயர்ந்தோரின் தேவைகளும், அவர்களது பங்கும் என்பது பற்றியகருந்தரங்கில் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கை முக்கியமாக குடிபெயர்ந்திருக்கும் 5 நாடுகளான இந்தியா. சீனா,மெக்சிகோ,ஃபிலிபினோஸ் மற்றும் வியடநாம் நாடுகளின் மக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது.

எச் 1 விசா பெற்றிருப்பவர்கள் உட்பட 272 இந்தியர்களிட113 கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் தொழில் புரியும் இடங்களின்நிலைகள், மனநிலை, கல்விக்கான வாயப்புகள் மற்றும் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சூழ்நிலை குறித்த கேள்விகளேமுக்கியமாக இடம் பெற்றிருந்தன.

தொழில்நுடப்பத்தை மட்டுமே மையமாக கொண்டுள்ள சிலிகன் வாலி இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்தோர் வாழ்வதற்கு கடினமானபகுதி என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஹெச் பி அல்லது சன் மைக்ரோ சிஸ்டம் போன்ற கம்பெனிகள் ஒரு மணி நேரத்திற்கு 75 டாலர் முதல் 17 டாலர் வரை ஊதியம்அளிக்கின்றன. எச்1 விசா பெற்ற்வர்கள் 25 டாலர் முதல் 30 டாலர் வரை மட்டுமே ஊதியம் பெற முடிகிறது.

அமெரிக்க இந்திய பெண் ஒருவர் கூறுகையில், நான் இங்கு பணிக்கு சேருவது சுலபமாக இருந்தது. ஆனால் அதன் பின் பதவி உயர்வு என்பதுகடினமாக இருந்தது. ஆனால் ஆண்களுக்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என தெரிவித்தார்.

ஜெஸ்சி சிங் என்பவர் தனது அனுபவம் பற்றி கூறுகையில், 1996-ம் ஆண்டு நான் அமெரிக்கா வந்தபோது எனது தொழில் நுட்பபடிப்பை எவ்வாறு பயன்படுத்துவது என தெரியாமல் திணறினேன். வாழ்வதற்காக பிசா உணவுப் பொருட்களை வீடு வீடாக சென்றுகொடுப்பது உட்பட பல இடங்களில் பணி புரிந்தேன். அமெரிக்க நிறுவன இயக்குனர் ஒருவர் என்னை கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்குமாறுகூறினார். அதை படித்த பின் தான் என் வாழக்கையில் பல வெற்றிகளை பெற்றேன்.

என் போன்றவர்கள் இங்கு வரும் மக்களுக்கு உதவ வேண்டும். நாம் நன்றாக வாழும் போது மற்றவர்களையும் வாழ வைக்கவேண்டும். இங்கு குடிபெயர்பவர்கள் நலமுடன் வாழ உதவ வேண்டும்

சிலிகான் வாலியின் பொருளாதாரமே ஆசியர்களின் பங்கேற்பால்தான் நிர்ணியிக்கப்படுகிறது. 1995 முதல் 1998 வரை 29 சதவிகிதசிலிகான் வாலி நிறுவனங்கள் இந்தியர்களாலோ அல்லது சீனர்களாலோதான் நடத்தப்பட்டு வந்தது. புதிதாக துவக்கப்பட்ட 700நிறுவனங்கள் இந்தியர்களால் நடத்தப்படுகின்றன என்றார் ஜெஸ்சி.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X