For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருச்சியில் போட்டியிடுவாரா குமாரமங்கலம் தங்கை?

By Staff
Google Oneindia Tamil News

கேள்வி - பதில்

கே: நடிகர் ராஜ்குமாருக்கு நினைவுப் பரிசுகள் எல்லாம் கொடுத்து அனுப்பியுள்ளானே வீரப்பன்? இதுஎதைக் காட்டுகிறது?

ப: தூது போனவர்கள் கையோடு, இந்த நினைவுப் பரிசுகளை எடுத்துப் போயிருக்கிறார்கள், என்பதைக்காட்டுகிறது.

கே: இப்போது காட்டுக்குள் சென்றிருக்கும் அதிரடிப்படையால், வீரப்பனைப் பிடித்து வர முடியும் என்றுநம்புகிறீர்களா?

ப: தப்பிப் போக நினைத்த இடத்திற்கு வீரப்பன் போய் விட்டான் - என்பது ஊர்ஜிதமான பிறகுதான், இந்தப்படையே காட்டுக்குள் அனுப்பப்பட்டிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

அதனால் வீரப்பன் இல்லாத இடத்தில் அவனைத் தேடுவதுதான் இந்த அதிரடிப்படையின் பணியாக இருக்கும்என்று தோன்றுகிறது.

இது ஒரு புறமிருக்க, இப்போது பிரச்னை வீரப்பன் மட்டுமல்ல, அவனுடன் இருக்கிற தீவிரவாதிகளும் பிடிபடவேண்டியவர்களே.

இதை மறந்துவிட்டு. வீரப்பனைப் பற்றி மட்டுமே - பலரும் கேள்விகள் எழுப்புவது, அரசுக்கு வசதி: மாநிலத்திற்குஅவதி.

கே: ராஜ்குமார் கடத்தல் மற்றும் விடுதலை சம்பவத்தை ஆராய, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தர விடவேண்டும் என்று ஜெயலலிதா வற்புறுத்தியுள்ளாரே... ?

ப: அப்போது கூட உண்மை வெளிவரும் என்று நான் நம்பவில்லை. வீரப்பனைக் காப்பாற்றுவது தமிழக ஆளும்கட்சிக்கு அவசியம்: தமிழக ஆளும் கட்சியைக் காப்பாற்றுவது மத்திய அரசுக்கு அவசியம்: மத்திய அரசைக்காப்பாற்றுவது சி.பி.ஐ.க்கு அவசியம். இதனால் உண்மை அனாவசியம்.

கே: தமிழுக்கும், தமிழர்களுக்கும் குரல் கொடுப்பதில் இன்று யார் முன்னணி ... ?

ப: வீரப்பன்.

கே: வீரப்பனை பிடிப்பதில் அவசரம் கூடாது என்றும்: வீரப்பன் திருந்தி வாழ ஒரு வாயப்புத் தரவேண்டும் என்றும் - மூப்பனார் கூறியிருப்பது பற்றி ... ?

ப: நான் அவரிடம் இது பற்றி கேட்டேன்; தான் அம்மாதிரி பேசவில்லை - தன்னுடைய கருத்து சரியாகவெளியிடப்படவில்லை என்று அவர் கூறுகிறார்.

கே: கொடி என்பது வெறும் துணி தான் - என்று அப்துல் லத்தீஃப் கூறியிருப்பது பற்றி ... ?

ப: ரூபாய் என்பது கூட வெறும் காகிதம்தான். அதற்காக அதை கிழித்துப் போட முடியுமா?

கே: எல்லாப் புகழும் இறைவனையே சாரும் என்பது போல், நடிகர் ராஜ்குமாரை மீட்ட அத்தனைபெருமையும் முதல்வர் கருணாநிதியையே சாரும் என்று வாழப்பாடி ராமமூர்த்தி கூறியுள்ளது பற்றி ...?

ப: இப்போதைக்கு முதல்வர் பக்தி வாழப்பாடிக்கு இருக்கிறது. சரி ... தேசிய ஜனநாயக ஜனநாயகக் கூட்டணியில்பா.ம.க. நீடிக்குமா நீடிக்காதா என்பது தெளிவாகட்டும்.

அதற்கு பிறகுதான் வாழப்பாடியின் இந்த முதல்வர் பக்தி நிலைக்குமா, அல்லது நாத்திகமாக மாறுமா என்பதுதெரியும்.

கே: காஸ், மண்ணெண்ணெய் விலையை உயர்த்தினால், ஐயோ பாவம் மக்கள் எனக் கூக்குரல்எழுப்புகின்றன எதிர்க்கட்சிகள். விலையைக் கொஞ்சம் குறைத்தால் மம்தாவிடம் சரணடைந்து விட்டார்பிரதமர் என்கின்றன அதே எதிர்க்கட்சிகள். பிரதமர் என்னதான் செய்வார்...?

ப: பிரதமரைப் பொறுத்தவரையில். இதைவிட கொடுமையும் ஒன்று உண்டு. பெட்ரோலியப் பொருட்கள் விலையைஉயர்த்தியதால் மட்டும், பொருளாதாரப் பிரச்னை தீர்ந்து விடப் போவதில்லை: குறைத்ததால் மட்டும் மம்தாவின்ஆதரவு நீடிக்கும் என்பதும உறுதியல்ல. கெட்ட பெயர்தான் மிச்சம்.

கே: உங்கள் ஜோதிடத்திற்கு ஒரு சவால்! தமிழ்நாட்டில் அடுத்து வருவது - தனிக்கட்சி ஆட்சியா?கூட்டணி ஆட்சியா?

ப: நிச்சயமாக பலிக்கப் போகிற ஜோதிடம் கூறுகிறேன் - கூட்டணி ஆட்சிதான். பணம் பண்ணுவதற்காக வருகிறஅரசியல்வாதிகளும், அதற்கு உதவி புரிந்து, தாங்களும் பயன் பெறுகிற அதிகாரிகளும் சேர்ந்து அமைக்கிற -கூட்டணி ஆட்சி.

கே: சொந்த கருத்திற்கும், கட்சி கருத்திற்கும் என்ன வித்தியாசம்?
ப: கட்சிக் கருத்தை ஒருவர் வெளியிடுகிற போது, கட்சிக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டால், அது அவருடைய சொந்தக்கருத்தாக மாறும்.

கே: வீரப்பன் விவகாரத்தில் தற்போதைய தமிழக அரசின் அணுகுமுறை, கர்நாடக அரசின் அணுகுமுறை- ஒப்பிடுக.

ப: பிடிக்க வேண்டும். - என்பது கர்நாடக அரசின் அணுகுமுறை: நடிக்க வேண்டும் என்பது தமிழக அரசின்அணுகுமுறை.

கே: வீரப்பன் விவகாரத்தில் கர்நாடக முதல்வர் காட்டும் தீவிரத்தை, தமிழக முதல்வர் காட்டவில்லையேஏன்?

ப: கர்நாடக முதல்வருக்கென்ன வந்தது? நெடுமாறன் கோஷ்டி. விடுதலைப் புலி, தமிழ் தீவிரவாதிகள் ... என்றுபலரிடம் மன்றாடும் அவசியம் அவருக்கு இருக்கிறதா? கவலைப்படாமல், தீவிரம் காட்டுகிறார்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X