For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மருதமலைக் கோவிலில் பிப். 7ல் தைப்பூசம்

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

Maruthamalai Muruganகோவை மருதமலை கோயிலில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு தைப் பூசத் தேரோட்டம்பிப்ரவரி 7ம் தேதி நடக்கவுள்ளது.

கோவை அருகே அமைந்துள்ள மருதமலை சுப்ரமணியசுவாமி கோயிலில் ஒரு கோடிரூபாய் செலவிலான திருப்பணிகள் நடந்து வருகிறது. புதிய கோயில் கட்டப்பட்டு,அதற்கான முன் மண்டபம் மற்றும் கோபுரம் ஆகியவை அமைக்கும் பணிகள் நடந்துவருகிறது.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் இந்தப் பணிகள் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடந்துவருகிறது. இந்தப் பணிகள் நடப்பதால் தேர் செலும் பாதையில் தடைகள் ஏற்பட்டுதேரோட்டம் நடக்கவில்லை. எனவே, இந்த தேரோட்டப் பாதையை சீரமைக்க ஆயிரம்லாரிகள் மண் தேவைப்படும் எனக் கணக்கிடப்பட்டது.

அதேசமயம் இவ்வளவு மண்ணைக் கொட்டினால், குடியிருப்பு பகுதியில் அதிக சுமைஏற்பட்டு அங்குள்ள குடியிருப்புகளுக்கு சேதம் ஏற்படும். எனவே பாதை அமைப்பதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை கமிஷனர் கே.கே ராஜா, பேரூர் ஆதீனம்சாந்தலிங்க ராமசாமி அடிகள், ஆகியோர் தேரோடும் பாதை அமைப்பது குறித்துஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனையில், தேரோடும் பாதையை இரண்டு அடி ஆழப்படுத்தி சீரமைக்கமுடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ. 1.8 கோடி ரூபாய் செலவிடப்படும். மேலும், தீவிளக்குத் தூணை இடம் மாற்றி அமைக்க ரூ. 2 லட்சமும், 7 ஆண்டுகளாக நிலயிைல்இருந்து வரும் தேரை சீரமைக்க ஒரு லட்சமும் செலவிடப்படும். இந்த செலவினைபுரவலர்கள் ஏற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளனர்.

குமரன் வீற்றிருக்கும், குன்றிருக்கும் மலைகளில் மருதமலைக்குத் தனிச் சிறப்பு உண்டு.இந்த மலையில், மட்டுமே தேரோட்டம் உண்டு. மற்ற மலைகளில் தங்க ரதம் மட்டுமேவலம் வரும். இங்குள்ள தேர் 20 அடி உயரம், 12 அடி அகலம், 10 டன் எடையும்உள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X