For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உதவிக்கு வந்த ஸ்பானர்கள்

By Staff
Google Oneindia Tamil News

அகமதாபாத்:

56 மணி நேரம் மின் விசிறியில் தொங்கி உயிருக்கு போராடிய 30 வயது பெண்ணை இந்திய ராணுவத்தின் சீக்கியப் பிரிவு வீரர்கள் ஞாயிற்றுக்கிழமைகாப்பாற்றினர்.

குசம் சோனி என்ற பெண்ணை ராணுவ வீரர்கள் ஸ்குரூ டிரைவர், ஸ்பானர்கள் போன்றவற்றை பயன்படுத்தி அவரை காப்பாற்றினர்.

பூகம்பத்தில் உயிர் தப்பியவர்கள் மீட்பு குழுவினரிடம் காணாமல் போன தங்கள் உறவினர் இடிந்து கிடக்கும் வீடுகளில் இருக்கிறார்களா எனதேடிப்பார்த்து கண்டு பிடித்துக் கொடுக்கும் படி கோரும் காட்சி நெஞ்சை உருக்குகிறது.

குஜராத்தில் உணவுப் பொருட்களுக்கும், குடிநீருக்கும் பஞ்சம் நிலவி வருகிறது. பூகம்பத்தால் இறந்தவர்களை தகனம் செய்ய பல வாகனங்கள் விறகுககளைபூஜ் நகருக்கு கொண்டு வந்து கொண்டிருக்கின்றன.

இறந்து போன உடல்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்படாவிட்டால் கடும் நோய் பரவும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.குஜராத்தில் இரவு நேரம் குளிராக இருந்தாலும் பகல் நேர வெப்பம் 30 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

இது இடிபாடுகளுக்கிடையே சிக்கி உள்ள இறந்து போன உடல்களின் நிலையை மேலும் மோசமாக்கும் அபாயமும் உள்ளது.

முக்கியமான மருத்துவமனைகள் பூகம்பத்தில் இடிந்து விழுந்துவிட்ட காரணத்தால் 2,500 மருத்துவர்கள் திறந்த வெளி கூடாரங்களில் மருத்துவம் செய்துவருகிறார்கள்.

இடிந்து விழுந்த மருத்துமனையிலிருந்து 131 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. ஆனால் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி பெண்கள்,பிறந்த குழந்தைகள் கதி என்ன என்பது தெரியவில்லை,

பூகம்பத்திற்கு பிறகு ஏற்பட்ட 250 பூகம்ப தொடர்சி அதிர்வுகள் மீட்பு பணிகளை பாதித்தது. அது மக்களிடையே பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் கடல் வழி போக்குவரத்து

கான்ட்லா நகரில் இருக்கும் பாதிக்கும் அதிகமான கட்டிடங்கள் பூகம்பத்தால் இடிந்து போய்விட்டன. சனிக்கிழமை துறை முகப் பணிகள்பாதிக்கப்பட்டன.

மத்திய கடல்வழி போக்குவரத்து துறை அமைச்சர் கூறுகையில், கடல் வழி போக்குவரத்து ஞாயிற்றுக்கிழமை துவங்கிவிட்டது. சுறுசுறுப்பானகன்டாலா துறைமுகத்திலிருந்து 5 கப்பல்கள் சென்று விட்டன. ஒரு கப்பல் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்துள்ளது என கூறினார்.

ஆனாலும் அமைச்சரக உயர் அதிகாரிகள் மின்சார தடை, தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டதால் இன்னும் பல பிரச்சனைகள் இருப்பதாக தெரிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X