For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமைதி! அமைதி!! .. குண்டுக்கு அயராத புத்தர்

By Staff
Google Oneindia Tamil News

கண்டி:

இலங்கையின் கண்டியில் உள்ள புத்த ஆலயம் ஒன்று வெடிகுண்டுத் தாக்குதலுக்கு தப்பி உள்ளது. இதற்கு காரணம் இக்கோவில் தேன் மற்றும்மூலிகைகளால் கட்டப்பட்டதாகும்.

கண்டியில் புத்தரின் புனிதப்பல் பாதுகாக்கப்படும் தாலாடா மாலிகவா கோவிலின் முதன்மை காப்பாளர் நிரஞ்சன் விஜயரத்னே கூறியதாவது:

1998 ஜனவரி 25ம் தேதி வெடிபொருட்கள் ஏற்றிய டிரக் ஒன்று கோவிலின் நுழைவாயிலில் மோதி வெடித்தது. இதனால் இக்கோவிலின்மேற்கூரை மற்றும் வெளிப்புற சுவர்கள் பாதிக்கப்பட்டன. ஆனால், கோவிலின் உள்பகுதி சேதமடையவில்லை.

கோவில் முழுவதும் மூலிகைகள் மற்றும் தேன் கொண்டு கட்டப்பட்டதால் அதன் சுவர்கள் அதிர்வுகளை தடுக்காமல் அவை கடந்து செல்லும்வகையில் அமைந்துள்ளன. விடுதலைப் புலிகளின் இந்த முயற்சியை அடுத்தே இலங்கை அரசு அவ்வியக்கத்தை தடை செய்தது.

வெடிவிபத்தால் கிடைத்த மற்றொரு பயன் கோவிலின் சுவரில் வரையப்பட்டிருந்த ஜாதகக் கதைகள். புத்தர் காலத்தில் நிலவிய நாட்டுப்புற கதைகளானஇவை சுவற்றில் வரையப்பட்டிருந்தது கோவில் நிர்வாகத்திற்கே தெரியவரமாலிருந்ததற்கு காரணம் இந்தப்படைப்புகளை மறைத்து பிளாஸ்ட்டர்கள்ஒட்டப்பட்டிருந்தது தான்.

யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட வேண்டிய உலக நினைவுச் சின்னங்களில் ஒன்றான இக்கோவிலை புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அரசும்எதிர்க்கட்சிகளும் இக்கோவிலை பாதுகாப்பதற்கு வேண்டிய உதவிகளை செய்து வருகின்றன. இதுவரை இக்கோவிலை மறுசீரமைப்பதற்கான நிதிக்கு120 மில்லியன் கிடைத்துள்ளது.

கோவில் மறுசீரமைப்பிற்கு பழங்கால கட்டுமான முறையே பின்பற்றப்படுகிறது. வெளிநாட்டினரை இக்கோவில் மறுசீரமைப்பு கட்டுமானபணிக்குமற்றவர்கள் அழைக்க விரும்பிய போதும் உள்ளூர் மக்களைக் கொண்டே மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது.

16ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோவில் நவீன பாதுகாப்பு வசதிகளுடன் இருப்பதுடன், கோவிலுக்குள் வாகனங்கள் செல்ல தடை போன்ற பலமுன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் பாதுகாக்கப்படுகிறது.

இக்கோவிலின் சிறப்பம்சங்களை காணவரும் பார்வையாளர்கள் இலங்கை அரசின் தேசீய சொத்தாக அறிவிக்கப்பட்ட 50 ஆண்டுகளுக்கு மேல்இக்கோவிலில் இருந்த யானையக் காணத்தவறியதில்லை.

கோவிலின் சிற்பங்களும், ஓவியங்களும் கோவிலில் உள்ள தனி மியூசியத்தில் பாதுகாக்கப்படுகின்றன.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X