For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யார், யார்?

By Staff
Google Oneindia Tamil News

அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தையடுத்து அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

எந்தெந்த நாடுகள் எவ்வளவு உதவிகளைச் செய்துள்ளன என்பது குறித்த விவரம்:

இங்கிலாந்து: 69 பேர் கொண்ட மீட்புப்படை, 4 மோப்ப நாய்கள், 2000 லிட்டர் தண்ணீர் அடங்கிய தண்ணீர் பாட்டில்கள், 500 லிட்டர் பெட்ரோல்மற்றும் 10 மில்லியன் பவுண்ட்ஸ்.

அமெரிக்கா: 80 டன் அளவு நிவாரணப் பொருட்கள், நீர் சுத்திக்கரிக்கப்படும் இயந்திரம் மற்றும் கூடாரங்கள் அமைக்கப்படுவதற்கான சாதனங்கள்.

ரஷ்யா: 73 பேர் கொண்ட மீட்புப்படையினர் மற்றும் இடிபாடுகளை அகற்றும் கனரக இயந்திரங்கள்.

ஜப்பான்: பிரதமர் நிவாரண நிதித்திட்டத்தின் கீழ் 7.5 லட்சம் அமெரிக்க டாலர்கள் மற்றும் மனிதநேய அடிப்படையில் 2.5 லட்சம் அமெரிக்க டாலர்கள்.

ஜெர்மனி: 20 பேர் கொண்ட மீட்புப்படையினர் மற்றும் நிவாரணப் பொருட்கள்.

பிரான்ஸ்: 40 பேர் கொண்ட மருத்துவக்குழு, 10.5 மெட்ரிக் டன் அளவு கொண்ட மருத்துவ உபகரணங்கள், மோப்பநாய்கள் மற்றும் 9 பேர்கள் கொண்டமீட்புப்பணியாளர்கள்.

பாகிஸ்தான்: நிவாரணப் பொருட்கள் மற்றும் கம்பளிகள்.

சுவிட்சர்லாந்து: 45 பேர் கொண்ட மீட்புப்படையினர் மற்றும் மோப்பநாய்ப்படை.

துருக்கி: 35 பேர் கொண்ட மீட்புக்குழுவினர், 10 மெட்ரிக் டன் அளவு கொண்ட மீட்பு உபகரணங்கள், ஒரு மெட்ரிக் டன் மருந்துப் பொருட்கள்.

ஹங்கேரி: 3 மோப்ப நாய்களுடன் கூடிய 15 பேர் கொண்ட மீட்புக் குழுவினர் மற்றும் 7 மெட்ரிக் டன் அளவு கனரக இயந்திரங்கள்.

ஓமன்: 40 மெட்ரிக் டன் அளவு கொண்ட நிவாரணப் பொருட்கள்.

குவைத்: ஆறு பேர் கொண்ட குழுவினர் எண்ணெய், உணவு, கம்பளிகள் மற்றும் கூடாரங்களை அமைப்பதற்கான சாதனங்களைக் கொண்டு வந்துள்ளனர்.

மலேசியா: 20 பேர் கொண்ட மீட்புக்குழுவினர் மற்றும் இடிபாடுகளை அகற்றும் கனரக இயந்திரங்கள்.

இஸ்ரேல்: பூஜ்ஜில் 60 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைப்பதற்கான உபகரணங்கள்.

இதுதவிர 8 நாடுகளிலிருந்து வந்துள்ள நடமாடும் மருத்துவமனைகளும் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X